காஷ்மீர் - 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

  Newstm Desk   | Last Modified : 01 Nov, 2018 10:03 am
kashmir-two-terrorists-shot-dead

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், பத்காம் மாவட்டத்தில் 2 தீவிரவாதிகளை பாதுகாப்புப் படையினர் இன்று சுட்டுக் கொன்றனர். கொல்லப்பட்ட தீவிரவாதிகள் எந்த இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்பது இதுவரையிலும் கண்டறியப்படவில்லை.

பத்காம் மாவட்டத்துக்கு உள்பட்ட ஸாகு அரைசல் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாகக் கிடைத்த தகவலையடுத்து, பாதுகாப்புப் படையினர் அப்பகுதியில் இன்று அதிகாலையில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது தீவிரவாதிகள் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தியதை தொடர்ந்து இரு தரப்புக்கும் இடையே மோதல் மூண்டது.

இறுதியில் தீவிரவாதிகள் இருவரும் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்த ஆயுதங்கள் மற்றும் வெடிபொருள்கள் கைப்பற்றப்பட்டன. சம்பவம் நடைபெற்ற பகுதியில், வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தி முடிக்கும் வரையிலும் பொதுமக்கள் யாரும் நடமாட வேண்டாம் என்று காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. அப்பகுதியில் மேலும் தீவிரவாதிகள் பதுங்கியுள்ளனரா என்ற சந்தேகத்தின் பேரில் தேடுதல் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

newstm.in

 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close