பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியாக பேருந்து சேவை - இந்தியா கடும் எதிர்ப்பு

  Newstm Desk   | Last Modified : 01 Nov, 2018 10:27 am

india-opposes-bus-service-between-china-and-pakistan

பாகிஸ்தானுக்கும், சீனாவுக்கும் இடையே, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதி வழியாக பேருந்து சேவை தொடங்கவுள்ளதற்கு, இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது இந்திய இறையாண்மை மற்றும் பிராந்திய ஒற்றுமையை சீர்குலைக்கும் செயல் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனா - பாகிஸ்தான் இடையே, பொருளாதார வழித்தட ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி, சீனாவின் காஷ்கர் நகரில் இருந்து பாகிஸ்தானின் லாகூர் பகுதிக்கு புதிய பேருந்து சேவை, வரும் 13ம் தேதி தொடங்கவுள்ளது. ஆனால், பாகிஸ்தானால் ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள, இந்தியாவுக்குச் சொந்தமான காஷ்மீர் பகுதி வழியாக அப்பேருந்து சேவை இயங்கவுள்ளது. இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இந்திய வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் ரவீஷ் குமார் கூறுகையில், ”பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியாக சீனா - பாகிஸ்தான் இடையே தொடங்கும் பேருந்து சேவைக்கு இந்தியாவின் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்துள்ளோம். ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியையும் தங்கள் பகுதியாக காண்பித்து பாகிஸ்தான் - சீனா இடையே 1963ல் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை இந்தியா ஒருபோதும் ஏற்றுக் கொண்டதில்லை. அது சட்ட விரோதமானது, செல்லாதது என்றே தொடர்ந்து கூறி வருகிறோம். ஆகவே, ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியாக பேருந்து சேவை தொடங்குவது என்பது இந்தியாவின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒற்றுமையை மீறுவதாகும்’’ என்றார்.

newstm.in

 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close