படேல் சிலை -கம்பீரமும் வசீகரமும்!- பொதுமக்களுக்கு அனுமதி ஆரம்பம்!

  Padmapriya   | Last Modified : 01 Nov, 2018 11:30 am
this-is-how-much-it-will-cost-you-to-visit-the-statue-of-unity

உலகின் மிக உயரமான சிலை என்ற பெருமையோடு குஜராத்தில் அமைக்கப்பட்டுள்ள சர்தார் வல்லபாய் படேல் சிலை சுற்றுலா பயணிகள் பார்வைக்காக திறக்கப்படுகிறது. இதற்கான விலையும் நிர்ணயித்து அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்தியாவின் இரும்பு மனிதர் என்று வர்ணிக்கப்பட்டவர், சர்தார் வல்லபாய் படேல். குஜராத் மாநிலத்தை சேர்ந்த அவர் தேச விடுதலைப் போரில் தீவிரமாக ஈடுபட்டவர். அதுமட்டுமின்றி சுதந்திர இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சராகவும் பதவி வகித்தவர்.

முன்னூறு ஆண்டுகள் ஆட்சி செய்து, பெரும் போராட்டங்களுக்குப் பிறகு நாட்டை விட்டு கிளம்பிய பிரிட்டீஷ் அரசு, இந்தியாவை 566 சுதந்திர தேசங்களாக அறிவித்து நாட்டை பிளவுபடுத்தி, பெரும் குழப்பத்தை உருவாக்கிவிட்டுச் சென்றது.

அதைத்தொடர்ந்து 565 சமஸ்தானங்களை பெருமுயற்சிக்குப்பிறகு தனியொரு தலைவனாக நின்று ஒன்றிணைத்தவர் சர்தார் வல்லபாய் படேல். இதன் காரணமாகவே அவர் இந்தியாவின் இரும்பு மனிதர் என அழைக்கபடுகிறார்.

மேலும் இதில் இன்று மத்திய அரசும் தேசமக்களும் அவரைக் கொண்டாடுவதற்கு முக்கியக் காரணம் அவர் இணைத்து ஒன்றாக்கிவிட்டுச் சென்ற பகுதிகள் எதிலும் அமைதியின்மை என்பது பெரும்பாலும் இல்லாமல் இருந்து வருகிறது.

ஆனால் தேசத்தின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு, படேலை விலகியிருக்குமாறு கூறி, நான் இணைக்கும் முயற்சியை மேற்கொண்டு சரி செய்கிறேன் என்று இறங்கிய மாநிலமான ஜம்மு-காஷ்மீர் இன்றைய தேதி வரையிலும் இந்த தேசத்துக்கு தலைவலியாக இருந்து வருகிறது.

 இதிலிருந்து நேருவின் திறமையையும், படேலின் ஈடுஇணையற்ற ஆளுமையையும் நாம் புரிந்துகொள்ள முடியும். படேல் குறித்து குஜராத் மாநில மக்கள் இன்றளவும் அபிரிதமான பெருமித உணர்வுடன் இருப்பதற்கு முக்கிய காரணமாக அவரது ஆளுமை விளங்கி வருகிறது.

அத்தகைய தலைவருக்கு எழுப்பட்டுள்ள சிலையானது அமெரிக்காவில் உள்ள சுதந்திர தேவி சிலையைக் காட்டிலும், இரண்டு மடங்கு பெரியதாகும். படேல் சிலையின் மொத்த உயரம் 183 மீட்டர்.

சர்தார் சரோவர் அணையின் கீழ் பகுதியில் 3.5 கிலோ மீட்டருக்கு அப்பால், நர்மதை நதிக்கரையில் படேல் சிலை அமைந்துள்ளது. அதன் மொத்த கட்டுமானச் செலவு ரூ.2,989 கோடிகளாகும். கடந்த 2015ம் ஆண்டு டிசம்பர் மாதம் சிலை அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டன. இந்நிலையில், 34 மாதங்களில் அனைத்துப் பணிகளையும் முடித்து சிலை திறக்கப்பட்டுள்ளது. 

சிலை தயாரிப்புக்காக 70,000 டன் சிமெண்ட், 18,500 டன் உருக்கு, 6,000 டன் உருக்கு கம்பிகள் ஆகியவையும், சிலையின் வெளிப்பூச்சுக்காக 1,700 மெட்ரிக் டன் வெண்கலமும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. மணிக்கு 180 கி.மீ. வரையில் காற்று வீசினாலும்கூட கம்பீரமாக நிற்கும் வகையில் சிலை வடிமைக்கப்பட்டுள்ளது. இந்தச் செயலுக்கு ஒற்றுமைக்கான சிலை என பெயர் சூட்டப்பட்டு உள்ளது. 

இத்தகைய பெருமைகளும் பிரம்மாண்டமும் கொண்ட சிலையைக் காண, குஜராத்துக்கு பல்லாயிரக்கணக்கான சுற்றுலா பயணிகளை வருகைபுரிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. உலகின் மிகப்பெரிய நினைவுச் சின்னமாக உள்ள,  ஒற்றுமைக்கான சிலையை பார்வையிட தினமும் 10,000 சுற்றுலா பயணிகள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சிலைக்குள் லிஃப்ட் வசதி

படேலின் சிலையை சுற்றி சத்பூரா மலைத் தொடரின் வசீகரிக்கும் அழகு சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் என்று சுற்றுலாத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.மேலும், இந்த சிலையின் உட்புறம் இரும்பு மனிதர் வாழ்வினை சித்தரிக்கும் அருங்காட்சியகம் மற்றும் கண்காட்சி அரங்கங்கள் கட்டப்பட்டுள்ளது. இவற்றுக்கு செல்ல உட்புறமாக லிஃப்ட் வசதி செய்யப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் தங்குவதற்கு வசதியாக அறைகள் அமைக்கப்பட்டுள்ளதாக சுற்றுலா துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலை 9 மணி முதல் மாலை 6 மணிவரை சிலையை பார்வையிடலாம். சிலையின் வெளிப்புறத்தை மட்டும் பார்வையிடுபவர்களுக்கான கட்டணம் ரூ.120 (ஒரு நபருக்கு). கேலரியை பார்வையிடுபவர்களுக்கு ரூ.350 கட்டணமும் 3 வயதுக்கு குறைவான குழந்தைகளுக்கு இலவச அனுமதி என விலை என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  நாளை முதல் சுற்றுலா பயணிகள் 'ஒற்றுமைக்கான சிலை'யை பார்வையிட அனுமதிக்கபடுவார்கள் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Newstm.in 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close