2 லட்சம் கோடி கடன் ஒரு மேட்டரா? 400 சொகுசு கார்கள் வாங்கும் பஞ்சாப் அரசு

  Newstm Desk   | Last Modified : 01 Nov, 2018 05:11 pm
2-lakh-crores-debt-doesn-t-stop-punjab-government-to-buy-luxury-cars

2 லட்சம் கோடி ரூபாய் அளவு கடனில் பஞ்சாப் மாநில அரசு தத்தளித்து வரும் நிலையில், அம்மாநில முதல்வர் மற்றும் மந்திரிகளுக்கு 400 சொகுசு கார்களை வாங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது. 

சமீபத்தில், சுமார் 80 கோடி ரூபாய் மதிப்பில் பஞ்சாப் மாநில முதல்வர், அமைச்சர்கள் மற்றும் மூத்த அரசு அதிகாரிகளுக்கு 400 சொகுசு கார்கள் வாங்க அம்மாநில போக்குவரத்துத் துறை ஒப்புதல் அளித்தது. அதில் சுமார் 1.4 கோடி ருபாய் மதிப்புள்ள டொயோட்டா லேண்ட் க்ரூஸர் வகையை சேர்ந்த 16 கார்கள் வாங்க முடிவெடுக்கப்பட்டது. புல்லட் ப்ரூப் தொழில்நுட்பம் புகுத்தப்பட்ட இரண்டு லேண்ட் க்ரூஸர் கார்கள், முதல்வர் அம்ரிந்தர் சிங்குக்கு வழங்கப்படுகிறது. மந்திரிகளுக்கு 30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பர்சூனர் கார்கள், 97 எம்.எல்.ஏக்களுக்கு க்ரெஸ்ட்டா கார்களும் வழங்கப்பட இருக்கிறது. 

கடந்த மார்ச் மாதம் வெளியான அறிக்கையின் படி, பஞ்சாப் மாநில அரசு, 1,95,978 கோடி ரூபாய் கடனில் இருப்பது தெரிய வந்தது. இதற்கிடையே மந்திரிகளுக்கு இவ்வளவு செலவில் கார்கள் வாங்குவது கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. இவ்வளவு செலவு செய்து கார்கள் வாங்கினாலும், முன்னாள் முதல்வர் பிரகாஷ் சிங் படல் மற்றும் அகாலி தளம் கட்சியின் தலைவர் சுக்பீர் சிங் படல் ஆகியோருக்கு புல்லட் ப்ரூப் லேண்ட் க்ரூஸர் கார்கள் வழங்கப்படவில்லை. நிதி நெருக்கடியில் இருப்பதால், அவர்களுக்கு புதிய கார்கள் வழங்க முடியாது என பஞ்சாப் நிதியமைச்சர் தெரிவித்துள்ளார். 

இது பஞ்சாப் அரசுகளுக்கு புதிதல்ல. முன்னாள் முதல்வர் பிரகாஷ் சிங் படல், தனது ஆட்சியின் போது, தனக்காக மட்டுமே 14 லேண்ட் க்ரூஸர் சொகுசு கார்களை வாங்கியது குறிப்பிடத்தக்கது. 

newstm.in
 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close