பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேசம்... 

  ஐஸ்வர்யா   | Last Modified : 01 Nov, 2018 06:44 pm
delhi-andhra-pradesh-chief-minister-n-chandrababu-naidu-tdp-mps-jayadev-galla-cm-ramesh-and-others-meet-congress-president-rahul-gandhi

பாஜகவை வீழ்த்த காங்கிரஸ் - தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகள் ஒன்றிணைந்து புதிய கூட்டணியை ஏற்படுத்தவுள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. 

ஆந்திர பிரதேசத்தில் அடுத்தாண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் பாஜகவை வீழ்த்த காங்கிரஸ் உடன் கூட்டணி அமைப்போம் என அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு பேட்டியளித்துள்ளார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் ஆந்திர பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு இன்று சந்தித்து பேசினார். மேலும் பரூக் அப்துல்லா, ஷரத்தையும் சந்தித்து கலந்துரையாடினார்.

அடுத்தாண்டு நடக்க உள்ள நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக இருவரும் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது. நாடாளுமன்ற தேர்தலுடன் ஆந்திர பிரதேச மாநிலத்துக்கு சட்டமன்றத் தேர்தலும் நடக்க உள்ளது. தற்போது காங்கிரஸ் - தெலுங்கு தேசம் ஒன்றிணைந்துள்ளது பாஜக தரப்புக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close