பாஜக மாநில செயலாளர் அனில் பரிஹார் சுட்டுக் கொலை

  டேவிட்   | Last Modified : 01 Nov, 2018 11:09 pm

j-k-bjp-leader-anil-parihar-brother-shot-dead

ஜம்மு காஷ்மீர் பாஜக மாநில செயலாளர் அனில் பரிஹாரும் அவரது சகோதரர் அஜித் பரிஹாரும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். 

ஜம்மு காஷ்மீர் கிஷத்வார் பகுதியில், பாரதிய ஜனதா கட்சியின் மாநில செயலாளர் அனில் பரிஹாரும் அவரது சகோதரர் அஜித் பரிஹாரும் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவுகிறது. 

இன்று (நவ.1) இரவு அனில் பரிஹாரும் அவரது சகோதரர் அஜித் பரிஹாரும் கடைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பும்போது, அவர்களது வீட்டிற்கு அருகாமையில், மறைந்திருந்த நபர்கள் இருவரையும் சுட்டுக் கொன்றுள்ளனர். வீட்டின் அருகே இருந்த பாதுகாவலர்கள் இருவரையும் உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர். அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள், அவர்கள் ஏற்கனவே உயிரிழந்ததாக கூறியுள்ளனர். இதனையடுத்து கிஷ்த்வரில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குற்றவாளிகளை தேட தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தீவிரவாதிகளின் தாக்குதலா அல்லது வேறு ஏதாவது குற்றச்சம்பவமா என்பது குறித்து காவல்துறையினர்  தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பா.ஜ.க. பொதுச் செயலாளர் அசோக் கௌல் இந்த தாக்குதலுக்கு கண்டனத்தை தெரிவித்துள்ளார். 
 

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.