பெண்கள் சக்தி விருது 2018-க்கு விண்ணப்பிக்க கடைசி நாள் நவம்பர் 30 வரை நீட்டிப்பு

  சுஜாதா   | Last Modified : 02 Nov, 2018 11:06 am

wcd-ministry-extends-deadline-for-nari-shakti-puraskar-2018

மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு அமைச்சகம் பெண்கள் சக்தி விருது (நாரி சக்தி புரஸ்கர்) 2018-க்கு விண்ணப்பிக்க நவம்பர் 30 வரை காலக்கெடுவை நீட்டித்துள்ளது. 

இந்தியாவில் பெண்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான இது கடந்த 19 ஆண்டுகளாக வழங்கப்பட்டுவருகிறது. பெண்களின் அதிகாரமளித்தலுக்காக அயராது பாடுபடும் பெண்களுக்கும், நிறுவனங்களுக்கும் இந்த உயரிய விருது வழங்கப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச பெண்கள் தினத்தன்று குடியரசுத் தலைவர் பெண்கள் சக்தி விருதினை வழங்கி கவுரவித்து வருகிறார்.  சமூகத்திற்காக சிறந்த பங்களிப்பை வழங்கியவர்கள்,  சமூகத்தில் தங்களுக்கென தனி அடையாளத்தை உருவாக்கியவர்கள், பெண்களுக்கு நிலையான நிதி இருப்பை உறுதி செய்யும் பணிகளில் ஈடுபட்ட பெண்களை இந்த விருது அங்கீகரிக்கிறது.

“தடைகளை மீறி சாதித்து, இதற்கு முன் ஆய்ந்தறியப்படாத துறைகளில் தடம் பதித்து சமூகத்திற்கு நிரந்தரமான பங்களிப்பை அளித்த பெண் சாதனையாளர்களை இந்த விருது விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.”   என்று மத்திய பெண்கள் மற்றும் குழந்தை மேம்பாட்டுத் துறை அமைச்சர் திருமதி. மேனகா சஞ்சய் காந்தி தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டுக்கான விருதுக்கு விண்ணபிக்க கடைசி நாள் நவம்பர் 30, 2018 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்களுக்கு தேவையான ஆவணங்களை துணை செயலர் (டபிள்யு டி & ஐ.சி.), மத்திய பெண்கள் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சகம், அறை எண்.632, 6-வது மாடி, சாஸ்திரி பவன், புதுதில்லி 110001 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் விருது குறித்த விதிமுறைகளை தெரிந்து கொள்ள http://www.wcd.nic.in/award  என்ற இணைய தளத்தை அணுகவும்.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.