போபர்ஸ் வழக்கு: சிபிஐ மேல்முறையீட்டு மனுவை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்!

  Newstm Desk   | Last Modified : 02 Nov, 2018 02:16 pm

sc-dismisses-cbi-s-appeal-in-bofors-case

போபர்ஸ் வழக்கில் டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட சிபிஐ மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து  உத்தரவிட்டுள்ளது. 

1986ல் ராஜிவ் காந்தி பிரதமராக இருந்த போது ஸ்வீடன் நாட்டின், போபர்ஸ் நிறுவனத்திடம் இருந்து, ராணுவத்துக்கு, ரூ. 1,437 கோடிக்கு பீரங்கிகள் வாங்குவதற்கு ஒப்பந்தம் செய்ததில் ரூ. 64 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வழக்கை சி.பி.ஐ விசாரிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டதையடுத்து, தொடர்ந்து விசாரணை நடைபெற்றது. 

இதனை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், கடந்த 2005ல் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில்,  சிபிஐ பதிவு செய்த வழக்கை ரத்து செய்து இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட அனைவரையும் விடுவித்து உத்தரவிட்டது. 

வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட்டு, 12 ஆண்டுகள் ஆன நிலையில்,  இந்த வழக்கை மீண்டும் எடுக்கப்போவதாக சிபிஐ தெரிவிக்க, அதற்கு அட்டர்னி ஜெனரல் மறுத்ததாக கூறப்படுகிறது. ஆனால் அதையும் மீறி, சிபிஐ இந்த வழக்கில் கடந்த 2017 பிப்ரவரி மாதம் மேல்முறையீடு செய்தது. 

இந்த மனு நீதிபதிகள் ரஞ்சன் கோகெய், கே.எம். ஜோசப் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. சுமார் 12 ஆண்டுகள் கழித்து மேல்முறையீடு செய்ததால் இந்த வழக்கை விசாரிக்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர். பின்னர் இந்த மேல்முறையீட்டு வழக்கு தள்ளுபடி செய்வதாக அறிவிக்கப்பட்டது. 

newstm.in

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.