#MeToo பெண் பத்திரிகையாளரின் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு.. எம்.ஜே அக்பர் மறுப்பு

  Newstm Desk   | Last Modified : 02 Nov, 2018 04:39 pm
mj-akbar-refutes-us-journalist-s-rape-allegations

பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு பிறகு, தனது பதவியை ராஜினாமா செய்த முன்னாள் மத்திய அமைச்சர் எம்.ஜே அக்பர், மீது அமெரிக்காவில் பணிபுரிந்து வரும் மற்றொரு பெண் பத்திரிகையாளர் புதிய பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளளார். 

அமெரிக்காவின் தேசிய ரேடியோவில் பணிபுரிந்து வரும் பத்திரிகையாளர் பல்லவி கோகோய். இவர் 'தி ஏசியன் ஏஜ்' என்ற பத்திரிக்கையில் பணியாற்றியபோது, அப்போதைய பத்திரிக்கை ஆசிரியர் எம்.ஜே அக்பர், தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டியுள்ளார்.

தொடர்ந்து தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தல் செய்து வந்த அக்பர், ஒருமுறை, வேலை நிமித்தமாக ஜெய்ப்பூருக்கு சென்றிருந்தபோது, அவரது ஓட்டல் அறைக்கு தன்னை அழைத்ததாகவும், அங்கு தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.

வாஷிங்க்டன் போஸ்ட் செய்தி நிறுவனத்தில் கோகோய் எழுதிய கட்டுரையில், "நான் எழுதி வந்த செய்தி குறித்து கேட்க என்னை ஓட்டல் அறைக்கு அழைத்தார். அங்கு நான் எவ்வளவு மறுத்தும், மல்லுக்கட்டியும், உடைகளை கிழித்து, என்னை பாலியல் வன்கொடுமை செய்தார். இந்த விஷயத்தை நான் வெளியிலே சொல்லவே இல்லை. அவர் மிக பெரிய புள்ளி. யார் என்னை நம்பப் போகிறார்கள் என நினைத்தேன். அவரது அறைக்கு சென்றது எனது தவறு தான், என, எனக்கு நானே சொல்லிக் கொண்டேன்" என்றார். 

"ஆனால், அதன்பின், என் மீதான அவரது பிடி இறுகியது. ஒரு கட்டத்திற்கு மேல், என்னால் சண்டை போட முடியவில்லை. தொடர்ந்து என்னை பாலியல் ரீதியாகவும், மன ரீதியாகவும், வார்த்தைகளாலும் துன்புறுத்தினார்" என்றுள்ளார். தன்னை லண்டனில் உள்ள அலுவலகத்திற்கு மாற்றியதாகவும், அங்கு வரும் போதெல்லாம் தனக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்ததாவும் கூறியுள்ளார். மேலும், அலுவலகத்தில் உள்ள ஆண் ஊழியர்களிடம் தான் பேசுவதை பார்த்தால், கையில் கிடைக்கும் பொருட்களை தன் மீது வீசி தனது ஆத்திரத்தை அக்பர் காட்டுவார் என்றும் கோகோய் தெரிவித்துள்ளார்.

அக்பரை தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினராக வைத்துள்ள பாரதிய ஜனதா கட்சியையும் கோகோய் தனது கட்டுரையில் விமர்சித்துள்ளார். "இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை. இவற்றை திட்டவட்டமாக மறுக்கிறோம்" என எம்.ஜே அக்பரின் வழக்கறிஞர் சந்தீப் கவுர் தெரிவித்துள்ளார். மேற்கொண்டு எடுக்கவுள்ள நடவடிக்கைகள் குறித்து விரைவில் முடிவெடுக்க உள்ளதாகவும் கவுர் தெரிவித்துள்ளார். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close