அடுத்த 2 தினங்களுக்கு மழை பெய்யும் - சென்னை வானிலை ஆய்வு மையம்

  Newstm Desk   | Last Modified : 02 Nov, 2018 04:50 pm
weather-forecast

வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 2 தினங்களுக்கு தமிழகம் மற்றும் புதுவையில் அநேக இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இன்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் ஸ்டெல்லா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "நேற்று கடலோரத் தமிழகம், தெற்கு உள் தமிழகம், புதுவை மற்றும் தெற்கு கடலோர ஆந்திராவில் தொடங்கிய வடகிழக்குப் பருவமழை இன்று தமிழகத்தின் இதரப்பகுதிகள் மற்றும் தமிழகத்தை ஒட்டியுள்ள தெற்கு உள் கர்நாடகா, ராயலசீமா மற்றும் கேரளாவிலும் தொடங்கி உள்ளது.

வளிமண்டலத்தில் காற்றின் மேலடுக்கு சுழற்சி தென் தமிழகம் மற்றும் குமரிப்பகுதியில் நிலவுவதால் அடுத்த 2 தினங்களுக்கு தமிழகம் மற்றும் புதுவையில் அநேக இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யும். அடுத்த 48 மணி நேரத்திற்கு மீனவர்களுக்கான எச்சரிக்கை எதுவும் இல்லை. 

சென்னையைப் பொறுத்தவரை அடுத்த வரும் 24 மணி நேரத்திற்கு அவ்வப்போது வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில நேரம் மிதமான மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யும். கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் அனேக இடங்களில் மழை பெய்துள்ளது. குறிப்பாக டெல்டா பகுதிகளில் கனமழை பெய்துள்ளது. வேதாரண்யம் 15 செ.மீ. நாகை 14 செ.மீ. திருத்துறைப்பூண்டி 13 செ.மீ. மயிலாடுதுறை 9 செ.மீ. அளவிலும், காரைக்கால், நன்னிலம், பாம்பன், ராமேஷ்வரம் மற்றும் இதரப் பகுதிகளிலும் மழை பெய்துள்ளது" என்றார். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close