பா.ஜ.கவில் இணைந்த காங்கிரஸ் மூத்த தலைவர்!

  Newstm Desk   | Last Modified : 02 Nov, 2018 05:24 pm
premchand-guddu-former-congress-mp-from-madhyapradesh-joins-bjp

மத்திய பிரதேச மாநிலத்தின் சட்டசபை தேர்தல் வருவதையொட்டி, காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான பிரேம்சந்த், இன்று பா.ஜ.கவின் தேசிய செயலர் கைலாஷ் விஜய்வர்ஜியா முன்பாக அக்கட்சியில் இணைந்துள்ளார். 

காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவர் மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பிரேம்சந்த் குடு. இவர் அம்மாநிலத்தின் முந்தைய சட்டசபை தேர்தலின் போதே பாஜகவில் இணைவதாக அறிவித்தார். ஆனால் அந்த சமயத்தில் காங்கிரஸ் தலைவர்கள் அவரை சமாதானப்படுத்தி, கட்சியை விட்டு வெளியே போகாமல் பார்த்துக்கொண்டனர். 

இந்த சூழ்நிலையில்,இம்மாத இறுதியில் மத்திய பிரதேச மாநில சட்டசபை தேர்தல் நடைபெற இருப்பதால், பிரேம்சந்த் காங்கிரஸில் இருந்து பா.ஜ.க.வில் இணைந்துள்ளார். பா.ஜ.கவின் தேசிய பொதுச் செயலர் கைலாஷ் விஜய்வர்ஜியா முன்பாக இன்று அவர் அக்கட்சியில் இணைந்தார். 

பிரேம்சந்த் 2009ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் மத்திய பிரதேசம் உஜ்ஜையினி தொகுதியில் இருந்து சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close