'கள்ள உறவு தான்; வன்கொடுமை இல்லை': எம்.ஜே அக்பர் மனைவி புதிய திருப்பம்!

  Newstm Desk   | Last Modified : 02 Nov, 2018 06:43 pm
mj-akbar-and-wife-mallika-refute-pallavi-s-rape-allegations

எம்.ஜே.அக்பர் மீது பத்திரிகையாளர் பல்லவி கோகோய் சுமத்தியுள்ள பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகள் பொய் என்றும், இருவரும் விருப்பத்துடனேயே உறவு வைத்திருந்ததாகவும், அக்பரின் மனைவி மல்லிகா அறிக்கை வெளியிட்டுள்ளார்.

பல பெண் பத்திரிகையாளர்கள் சுமத்திய பாலியல் குற்றச்சாட்டுகளை தொடர்ந்து எழுந்த நெருக்கடியால், தனது பதவியை ராஜினாமா செய்தார் முன்னாள் மத்திய அமைச்சர் எம்.ஜே அக்பர். இந்நிலையில், அமெரிக்காவில் பத்திரிக்கையாளராக பணிபுரியும் பல்லவி கோகோய் எழுதிய ஒரு கட்டுரையில், 23 ஆண்டுகளுக்கு முன்னர், 'தி ஏசியன் ஏஜ்' பத்திரிகையின் ஆசிரியராக பணியாற்றிய அக்பர், பத்திரிகையாளரான தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டினார். 

இந்த குற்றச்சாட்டுகளுக்கு, எம்.ஜே அக்பரின் வழக்கறிஞர் சந்தீப் கவுர் திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்திருந்தார். இந்நிலையில், இதுகுறித்து எம்.ஜே அக்பர் மற்றும் அவரது மனைவி, மல்லிகா அக்பர் அறிக்கை வெளியிட்டுள்ளனர். 1994ம் ஆண்டு, பல்லவி கோகோயுடன் தான் கள்ளத் தொடர்பு வைத்திருந்ததாக ஒப்புக்கொண்ட அக்பர், அவரை ஒருபோதும் வன்கொடுமை செய்யவில்லை என தெரிவித்துள்ளார். விருப்பதுடனேயே இருவரும் உறவு வைத்திருந்தகாகவும், இதனால் தனது குடும்பத்தில் பல குழப்பங்கள் ஏற்பட்டதாகவும் கூறியுள்ளார். "எங்களுடன் பணியாற்றிய யாரை வேண்டுமானாலும் கேட்டு பார்க்கலாம். எந்த சமயத்திலும் பல்லவி மன அழுத்தத்துடன் வேலை செய்ததாக குறியீடு இல்லையென்றும், நான் கூறுவது உண்மையென்றும் அவர்கள் தாராளமாக சாட்சி கூறுவார்கள்" என்றார்.

இந்த விவகாரம் குறித்து தனி அறிக்கை வெளியிட்டுள்ள அக்பரின் மனைவி மல்லிகா அக்பர், பல்லவி கோகோய் தனது கணவருடன் கள்ள உறவு வைத்திருந்ததாக தெரிவித்தார். அடிக்கடி தனது வீட்டிற்கு வரும் பல்லவி, வீட்டில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் எல்லோர் முன்னிலையிலும், தனது கணவருடன் நெருக்கமாக இருந்ததாகவும் தெரிவித்துள்ளார். "மற்ற குற்றச்சாட்டுகள் வந்தபோது நான் அமைதி காத்தேன். ஆனால், பல்லவியின் கட்டுரையை பார்த்தவுடன் எனக்கு தெரிந்தவற்றை சொல்ல வேண்டும் என முன்வந்துள்ளேன்" என்றார் மல்லிகா.

newstm.in
 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close