உச்சநீதிமன்றத்தில் இந்தியில் வாதிட்ட நீதிபதி! எச்சரித்த தலைமை நீதிபதி..!

  ஐஸ்வர்யா   | Last Modified : 02 Nov, 2018 07:43 pm
sc-working-on-translating-its-judgments-and-orders-in-hindi

உச்சநீதிமன்றத்தில் இந்தியில் வாதிட்ட மாவட்ட நீதிபதியிடம் ஆங்கிலத்தில்தான் பேச வேண்டும் எனத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தெரிவித்துள்ளார்.

கூடுதல் மாவட்ட நீதிபதியின் பதவி உயர்வு குறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது அந்த மாவட்ட நீதிபதி இந்தியில் வாதிட்டார். இதைப் பார்த்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் அதிர்ச்சியடைந்தார். நீதிபதியாக இருப்பவர் ஆங்கிலத்தில் பேச வேண்டாமா என அவரிடம் தலைமை நீதிபதி கேட்டார். அதற்கு, தனக்கு ஆங்கிலத்தில் பேசத் தெரியாது என மாவட்ட நீதிபதி பதிலளித்தார்.

இதையடுத்து மாவட்ட நீதிமன்றத்தை இந்தியிலேயே நடத்தி இந்தியிலேயே தீர்ப்பெழுதலாம். ஆனால் உச்சநீதிமன்றத்தில் ஆங்கிலத்தில்தான் பேச வேண்டும் என்றும் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அவருக்கு அறிவுறுத்தினார். உயர்நீதிமன்றங்களிலும் கீழ் நீதிமன்றங்களிலும் இந்தியிலும் மாநில மொழிகளிலும் வாதிட அனுமதிக்கப்படுகிறது. அரசியலமைப்புச் சட்டத்தில் உச்சநீதிமன்றத்தின் அனைத்து நடைமுறைகளிலும் ஆங்கிலமே பயன்படுத்த வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளது என்று ரஞ்சன் கோகாய் தெரிவித்தார்.

Newstm.in 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close