65 புள்ளிகள் முன்னேறிய இந்தியா: பிரதமருக்கு உலக வங்கித் தலைவர் பாராட்டு

  Newstm Desk   | Last Modified : 03 Nov, 2018 12:11 am
jim-yong-kim-wishes-narendra-modi

பிரதமர்  நரேந்திர மோடியின் நான்காண்டு ஆட்சிக் காலத்தில் எளிதாக தொழில் தொடங்க உகந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா 65 புள்ளிகள் முன்னேறியதற்கு உலக வங்கி தலைவர் ஜிம் யாங் கிம் பாராட்டு தெரிவித்துள்ளார். 

கடந்த 2004-ம் ஆண்டில் எளிதாக தொழில் தொடங்க உகந்த நாடுகளின் பட்டியலில், இந்தியா 142-வது இடத்தில் இருந்தது. பின்னர் படிப்படியாக முன்னேற்றம் கண்டு, கடந்த 2016-ம் ஆண்டில் வெளியான 190 நாடுகள் கொண்ட பட்டியலில் இந்தியா 130-வது இடத்தில் இருந்தது.  இதன் பின்னர் 2017ஆம் ஆண்டில் மேலும் 30 இடங்கள் முன்னேறி டாப்- 100 நாடுகளில் ஒன்றாக உயர்வினை அடைந்தது. 

கடந்த 31ஆம் தேதி அன்று உலக வங்கி வெளியிட்ட நிகழாண்டிற்கான, ”சுலபமாக தொழில் செய்ய தகுந்த நாடுகள்” பட்டியலில் இந்தியா நூறில் இருந்து 23 புள்ளிகள் முன்னேறி 77-ம் இடத்தை பிடித்துள்ளது. 

மேலும், கடந்த 2014-ம் ஆண்டில் தெற்காசிய நாடுகள் அளவில் ஆறாவது இடத்தில் இருந்த இந்தியா இந்த அபரிமிதமான முன்னேற்றத்தின் மூலம் தெற்காசியாவிலேயே தொழில் தொடங்குவதற்கு எளிதான சூழல் உள்ள நாடுகளில் முதலிடத்தையும் இந்தியா தற்போது பிடித்துள்ளது.

இந்நிலையில், பிரதமர் மோடியின் நான்காண்டு ஆட்சிக் காலத்தில் எளிதாக தொழில் தொடங்க உகந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா 65 புள்ளிகள் முன்னேறியதற்கு உலக வங்கித் தலைவர் ஜிம் யாங் கிம் இன்று பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பாராட்டு தெரிவித்துள்ளார்.

சுமார் 125 கோடி மக்கள்தொகையை கொண்டுள்ள இந்தியா மிகவும் குறுகிய காலத்தில் இந்த அளவுக்கு வளர்ச்சியை பெற்றதற்கு தனது வாழ்த்துகளை ஜிம் யாங் கிம்  தெரிவித்து கொண்டதாக டெல்லியில் உள்ள பிரதமரின் அலுவலகம் தெரிவித்துள்ளது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close