காஷ்மீரால் தனி நாடாக வாழ முடியாது: உமர் அப்துல்லா

  Newstm Desk   | Last Modified : 03 Nov, 2018 05:46 am
independent-kashmir-can-t-survive-omar-abdullah

ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வர் மற்றும் தேசிய கான்பரன்ஸ் கட்சியின் தலைவர் உமர் அப்துல்லா, ஜம்மு காஷ்மீரின் வருங்காலம் இந்தியாவுடன் தான் என்றும், காஷ்மீரால் தனியாக வாழ முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லியில் நடைபெற்ற ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய உமர் அப்துல்லா, காஷ்மீர் இந்தியாவுடன் சேர்ந்திருக்க, தன்னாட்சி உரிமை வேண்டும் என அம்மாநில மக்கள் கோருவது அவர்களது உரிமை தான் என்றும் கூறினார். "உண்மையிலேயே ஜம்மு காஷ்மீரின் வருங்காலம் இந்தியாவோடு தான் என்பதை நான் நம்புகிறேன். இங்கு நான் அரசியல் பேசவில்லை. தனி காஷ்மீரால், ஒரு பக்கம் பாகிஸ்தான், ஒரு பக்கம் சீனா, ஒரு பக்கம் இந்தியாவை வைத்துக் கொண்டு வாழ முடியாது. இது அனுபவபூர்வமாக எடுத்த முடிவு. ஜம்மு காஷ்மீரை பற்றிய அடிப்படை புரிதல் இருப்பதால் இதை சொல்கிறேன்" என்றார் அப்துல்லா. 

மேலும், "காஷ்மீர் மக்கள் தனி நாடு கோருவது அவர்களது உரிமை. அதை நான் குறை சொல்ல மாட்டேன். அது முழுக்க முழுக்க உணர்ச்சிகளை மையமாக கொண்டது. ஆனால், எனது முடிவு, அதில் உள்ள நடைமுறை சிக்கல்களை அடிப்படையாக கொண்ட புரிதலாகும்" என்றார்.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close