போட்ஸ்வானாவில் உள்ள இந்தியர்களுக்கு அழைப்பு விடுத்த  வெங்கையா நாயுடு  

  சுஜாதா   | Last Modified : 03 Nov, 2018 06:52 am
contribute-to-the-exciting-growth-story-unfolding-in-india-today-vice-president-tells-indian-diaspora-in-botswana

இந்தியாவில் நடைபெறும் அற்புத வளர்ச்சிக்கு வெளிநாடுவாழ் இந்தியர்களும் பங்களிக்கலாம் என்று குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார். 

அரசு முறை பயணமாக ஆப்பிரிக்கா நாடுகளுக்கு சுற்று பயணம் மேற்கொண்டுள்ள குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு போட்ஸ்வானாவில் உள்ள இந்தியர்களிடம் உரையாற்றினார். 

அப்போது அவர் பேசியதாவது, போட்ஸ்வானாவின் பன்முகத்தன்மை கொண்ட, பரந்த மற்றும் ஜனநாயக சமுதாயத்துடன் மட்டும் போட்ஸ்வானாவில் உள்ள இந்தியர்கள் ஒருங்கிணையவில்லை, கூடுதலாக, போட்ஸ்வானாவின் பொருளாதாரத்திற்கும் பெரும் பங்காற்றியுள்ளனர்.
 
வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு இந்திய அரசு பெரும் முக்கியத்துவம் அளிக்கிறது என்று கூறிய குடியரசுத் துணைத் தலைவர், அவர்களை இந்தியாவின் கலாச்சார தூதர்கள் என்று குறிப்பிட்டார். ‘உலகம் உங்களை இந்திய நன்மதிப்புகள் மற்றும் வாழ்க்கை முறையின் பிரதிநிதிகளாக பார்க்கிறது’ என்று அவர் கூறினார்.

இந்தியாவில் ஏற்படும் மாற்றங்களை கூர்ந்து கவனிக்குமாறு போட்ஸ்வானாவில் வாழும் இந்தியர்களை கேட்டுக்கொண்ட குடியரசுத் துணைத் தலைவர், இந்தியா வேகமாக மாறுகிறது, மேலும் இந்தியாவின் வர்த்தக சூழல் நாளுக்கு நாள் சிறப்பாக மேம்படுகிறது என்று கூறினார். மேலும், ‘இன்று இந்தியாவில் நடைபெறும் அற்புத வளர்ச்சிக்கு நீங்களும் எவ்வாறு பங்களிக்கலாம் என்று சிந்தியுங்கள்’ என்று கேட்டுக்கொண்டார்.

வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் இந்தியாவின் தகவலை உலகுக்கு கொண்டு சேர்க்க வேண்டும் என்றும், அதே நேரத்தில் அங்குள்ள சிறந்தவற்றை இந்தியாவிற்கு கொண்டுவர வேண்டும், அப்போதுதான் நமது நாடு வேகமாக வளர்ச்சி அடையும் என்றும் அவர் தெரிவித்தார். 

மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தால் துறை இணை அமைச்சர் கிருஷ்ணன் பால் குர்ஜர் உள்ளிட்ட பலர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close