விறுவிறுப்பாக நடைபெறும் கர்நாடக இடைத்தேர்தல்! சராசரியாக 35% வாக்குப்பதிவு

  Newstm Desk   | Last Modified : 06 Nov, 2018 02:33 pm
karnataka-by-election-updates

கர்நாடகாவில், ஷிவமொகா, மாண்டியா, பல்லாரி ஆகிய 3 மக்களவை தொகுதிகளுக்கும, ராம்நகர், ஜமகண்டி ஆகிய 2 சட்டசபை தொகுதிகளுக்கும் இன்று இடைத்தேர்தல் நடைபெறுகிறது. 

கடந்த மாதம் தலைமை தேர்தல் ஆணையம், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், மிசோரம், ராஜஸ்தான், தெலங்கானா ஆகிய 5 மாநிலங்களுக்குமான சட்டசபை தேர்தல் தேதிகளை அறிவித்தது. இத்துடன் கர்நாடகாவில் காலியாக இருந்த 5 தொகுதிகளுக்கும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. அதில் ஷிவமொகா, மாண்டியா, பெல்லாரி ஆகிய மூன்றும் மக்களவை தொகுதிகள், ராம்நகர், ஜமகண்டி ஆகிய இரண்டும் சட்டசபை தொகுதிகள்.

கடந்த கர்நாடக சட்டசபை தேர்தலில் பாஜக பெருவாரியான இடங்களை கைப்பற்றியது.இரண்டாவது இடத்தில் இருந்த காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியுடன் கூட்டணி வைத்து ஆட்சி புரிந்து வருகின்றது. எனவே இந்த இடைத்தேர்தல் மூன்று பெரிய கட்சிகளுக்குமே முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றது. 

வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அனைத்து தொகுதிகளிலும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த 5 தொகுதிகளுக்குமான வாக்கு எண்ணிக்கை வருகிற 6ம் தேதி நடைபெறுகின்றன. 

மேலும், ஷிமோகா தொகுதியில் முன்னாள் முதல்வர்களான பங்காரப்பா, எடியூரப்பா, ஜே.ஹெச். படேல் ஆகியோரின் மகன்கள் மது பங்காரப்பா (ம.ஜ.த), ராகவேந்திரா (பா.ஜ.க), மது படேல் (ஐக்கிய ஜனதா தளம்) ஆகியோர் நேருக்கு நேர் மோதுகின்றனர். 3 முன்னாள் முதல்வர்களின் மகன்கள் ஒரே தொகுதியில் போட்டியிடுவதால் ஷிமோகாவில் தேர்தல் களம் அனல் பறக்கிறது.

பிற்பகல் 1 மணி நிலவரப்படி, ஷிவமொகா(30%) மாண்டியா(26%) பெல்லாரி(35%), ராம்நகர்(39%), ஜமகண்டி(43%) என்ற அளவில் வாக்குகள் பதிவாகியுள்ளன. 5 தொகுதிகளிலும் சேர்த்து சராசரியாக 34.6% வாக்குகள் பதிவாகியுள்ளது.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close