எடுப்பார் கைபிள்ளையாகிவிட்ட சிபிஐ

  பாரதி பித்தன்   | Last Modified : 04 Nov, 2018 12:08 am

about-cbi

மத்தியில் ஆளும் கட்சி தனது கைப்பாவையாக சிபிஐ அமைப்பை மாற்றிவிட்டதால் அது சந்திக்கும் அவமானம் மட்டும் அல்லாமல் நாட்டிற்கும் நீதி கிடைக்காமல் போய்விடுகிறது. அதற்கு சமீபத்திய உதாரணம் தான் சிபிஐ போபர்ஸ் ஊழல் குறித்தான மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் ஏற்க மறுத்ததைக் கூறலாம். 

இந்த வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ததே தாமதம் என்ற குற்றச்சாட்டு எழுந்த நிலையில் சுமார் 4500 நாட்கள் கடந்து மீண்டும் அந்த வழக்கை மேல்முறையீடு செய்தது வடிவேல் ஸ்டைலில் சொன்னால மிகத் தாமதம். சாதரணமாக ஒரு வழக்கில் மேல்முறையீடு செய்ய 90 நாட்கள் மட்டுமே அவகாசம் உண்டு. அதற்கு மேல் ஒரு சில நாட்கள், அல்லது மாதங்கள் கடந்தால் அதற்கு உரிய காரணத்தை விளக்கி மனுத்தாக்கல் செய்யலாம். ஆனால 4500 நாள் தாமத்திற்கு காங்கிரஸ் ஆட்சியில் இருந்தது தான் காரணம் என்று சிபிஐயால் வெளிப்படையாக கூற முடியுமா? இதனால் சுப்ரீம் கோர்ட்டின் வசவுகளை வாங்கிக் கொண்டு அடுத்த வேலையை பார்க்கப்போய்விடவேண்டியது தான். ஆனால் அதில் மறைந்திருக்கும் மர்மம்.

1986ம் ஆண்டு ராஜிவ்காந்தியுடன்  ஒத்தோவியோகுவாத்ரோச்சி உதவியால் சுவீடன் நாட்டின் போபர்ஸ் நிறுவனத்திடம் இருந்து 155மிமீ பீரங்கிகள் 410 எண்ணிக்கை வாங்க ஒப்பந்தம் கையெழுத்து ஆகிகிறது. இது 1.4 பில்லியன் டாலர் மதிப்பிலானது .

இதைத் தொடர்ந்து 16–4–1987ம் ஆண்டில் சுவிடன் நாட்டு வானொலி  ஒரு கட்டுரை வெளியாகிறது. அதில் சுவீஸ்,  இந்தியா உட்பட பல்வேறு நாடுகளுக்கு போபர்ஸ் நிறுவனம் கமிஷனாக லஞ்சம் கொடுத்தாக குற்றம்சாட்டியது. மேலும் அது பிரதமருக்கும், பாதுகாப்புதுறை முக்கிய அதிகாரிகளுக்கும் 60 கோடி ரூபாய் லஞ்சம் வழங்கியதாக குற்றம் சாட்டியது. அதன்பின்னர் தான் இது பற்றிய தகவல் இந்தியாவில் பரவியது. இந்து ராம், பத்திரிக்கையாளர் சித்ரா சுப்பிரமணியம் ஆகியோர் இந்த ஊழல் தொடர்பாக கட்டுரைகளை வெளியிடுகின்றனர். அதில் அவர் போபர்ஸ்  நிறுவனம் 8.9 மில்லியன் டாலர்கள் பரிமாற்றம் நடந்தாக குற்றம்சாட்டி கட்டரை வெளியிடுகிறார்.    சாம, தான, பேத தண்ட முறைகளால் இந்து இது தொடர்பான கட்டுரைகளை நிறுத்துகிறது. சித்ரா சுப்பிரமணியம் வேறு பத்திரிக்கைக்கு இடம்மாறுகிறார். அதன் பின்னர் எக்ஸ்பிரஸ், தி ஸ்டேட்ஸ் மென் பத்திரிக்கைகள் வெளியிடுகின்றன. நிஜமான புலானாய்வு நிருபராக சித்ராசுப்பிரமணியம் செயல்பட்டு பாதுகாப்பத்துறையில் இருந்து பல ஆவணங்களை வெளியே கொண்டு வந்து பிரசுகரம் செய்கிறார்.

இந்த சூழ்நிலையில் ராஜீவ் காந்தி, பாதுகாப்பு துறை அமைச்சராக இருந்து வி.பி. சிங்கை வெளியேற்றுகிறார். திமுக தலைவர் கருணாநிதி உட்பட பலரின் ஆதரவுடன் தேசிய ஜனநாயக்கட்சி ஆட்சியை பிடிக்கிறது. விபி சிங் பிரதமராககிறார். அந்த காலகட்டத்தில் போபர்ஸ் பீரங்கி ஊழல் விசாரணை தீவிரமாக நடந்துது. அதன் பின்னர் அவர் ஆட்சி கவிழ்ந்ததும் தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்த ராஜிவ் காந்தி 21–5–1991ம் ஆண்டு கொல்லப்படுகிறார். தொடர்ந்து வந்த நரசிம்மராவ் ஆட்சி காலத்தில் இந்த வழக்கு கிடப்பில் போடப்படுகிறது.  பி்ன்னர் வாஜ்பாய் பிரதமர் பொறுப்பேற்றதும் சிபிஐ 22–10–1999 அன்று முதலாவது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்கிறது. அதில் ராஜிவ், குரோச்சி, ஆயுத விற்பனை புரோக்கர் வின் சட்டா, எஸ்கே பட்னாகர் ஆகியோர் மீது குற்றம்சாட்டப்படுகிறது.

10 ஜூன் 2002ம் ஆண்டு டில்லி ஐகோர்ட் இந்த வழக்கில் முக்கிய முடிவை அறிவிக்கிறது. இது சிபிஐக்கு மிகவும் பி்னனடைவை ஏற்படுத்துகிறது. 31–5–205 அன்று இந்த வழக்கில் இருந்து ஸ்ரீசந்த், கோபிசந்த், பிரகாஷ் இந்துஜா ஆகியோரை வழக்கில் இருந்து டில்லி ஐகோர்ட் விடுதலை செய்கிறது. பின்னர் ஆட்சியல் காங்கிரஸ் அமர்ந்ததும் மீண்டும் வழக்கு கிப்பில் போடப்படுகிறது.
பின்னர் கடந்த 2017ம் ஆண்டு டெல்லி ஐகோர்ட் ஸ்ரீசந்த், கோபிசந்தி, பிரகாஷ் இந்துஜாவை வழக்கில் இருந்து விடுவித்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்கிறது.

இந்த மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்துவிட்டது. ஊழல் வழக்குள் தொடர்ச்சியாக நடந்தால் குற்றவாளிகள் தண்டனை பெறுகிறார்கள் என்பதற்கு ஓம்பிரகாஷ் சவுதாலா, லாலு, ஜெயலலிதா ஆகியோரே உதாரணங்கள். ஆனால் இவர்கள் தொடர்பான வழக்குளை விசாரித்த அமைப்புக்கும் இவர்களுக்கும் நேரடித் தொடர்பு இல்லை. போபர்ஸ் வழக்கை விசாரித்த சிபிஐ மத்திய அரசின் கட்டுப்பாட்டில் வருவதால் அந்த வழக்கை இழுத்து மூடி சுபம் போட்டுவிட்டது. நாட்டின் உயரிய அமைப்பின் செயல்பாடு இப்படி இருப்பது அனைவரும் வெட்கப்பட வேண்டிய விஷயம். 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close