கறை போக்குமா கடன் அறிவிப்பு ?

  பாரதி பித்தன்   | Last Modified : 04 Nov, 2018 12:20 am

modi-s-msme-loan

சமீக காலத்தி்ல் தமிழன் என்று நிருபிப்பதும், அறிவு ஜீவி என்பதை வெளிப்படுத்துவதும் மிகவும் எளிது. தமிழனா இருந்தால் ஷேர் பண்ணு என்ற வரும் வாட்ஸ் அப் மெசேஜ்யை படிக்காமல் கூட ஷேர் செய்தால் போதும் தமிழாக மாறிவிடலாம். அதே போல வீட்டில் உலை சரியாக கொதிக்காவிட்டால் கூட மோடி தான் காரணம் என்று கூறிவிட்டால் அறிவு ஜீவி பட்டியலில் இடம் பிடித்துவிடலாம்.

தமிழகத்தில் தற்போது இந்த சூழ்நிலைதான் உள்ளது. மோடி வெளிநாடுகளுக்கு சென்று பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினாலும் இது கார்ப்பரேட் நிறுவனத்திற்கு ஆதரவு நடவடிக்கை என்று தான் விமர்சிக்கப்படுகிறது. அதிலும் அம்பானி சகோதரர்களுக்காத்தான் பிரதமர் பதவிக்கே மோடி வந்துள்ளார் என்று அள்ளவிடப்படுகிறது.

இது பணமதிப்பு இழப்பு, ஜிஎஸ்டி ஆகியவை நடைமுறைப் படுத்தப்பட்டதும் மோடி எதிர்ப்பு கோஷம் வலுவாக எழுந்தது. இதில் பாதிப்பு இருந்தது தான். ஆனால் அது நாம் எப்படி இதுவரையில் வாழ்ந்துள்ளோம் என்பதை எடுத்துக்காட்டியது.

இது போன்ற குற்றச்சாட்டுக்களுக்கு மத்திய அரசு இது செயல் வழியாக எந்த பதிலும் கொடுக்கவில்லை. நேற்று முன் தினம் டில்லியில் நடந்த சிறு,குறு, மற்றும் நடுத்தர தொழில்துறையினரை சென்றடையும் விழாவில் பிரதமர் மோடி கடன் அறிவிப்பின் மூலம் பதில் சொல்லி உள்ளார். எம்எஸ்எம்இ தொழிலை மேம்படுத்த 12 கொள்கை முடிவுகளை முடிவு செய்துள்ளதாவும், அவற்றை விளக்கமாகவும் அந்த விழாவில் அவர் கூறினார்.

அதில் ஒரு லட்சம் ரூபாய் வரை கடன் 48 மணிநேரத்தில் வழங்குவதும், 59 கோடி ரூபாய் கடன் 59 நிமிடங்களில் வழங்குவதும் குறிப்பிடத்தக்கது. அதிலும் முன்னதற்கு நிறுவன ஆய்வாளருக்கே கடைசிநிமிடத்தில்  தான் எந்த நிறுவனத்தை ஆய்வு செய்யப் போகிறோம் என்பது தெரியும் என்று அவர் குறிப்பிட்டு இருப்பது இந்த துறையில் தொழில்தொடங்க முன்வருபவர்களுக்கு சிறந்த உதவியாக இருக்கும். இதை முன்பே தெரிவித்தால் வாங்கும் ஒரு லட்சம் கடனில் குதிரைக்கு பதிலாக சாட்டை தான் வாங்க முடியும்  அப்புறம் எங்கே கடனை திரும்ப செலுத்துவது.

கடன் மட்டுமே ஒரு நிறுவனத்தை நிலை நிறுத்துவது கிடையாது. போதிய சந்தைகள் கிடைக்காத நிலையில் நிறுவனத்தை தொடர்ந்து நடத்துவது இயலாமல் போகும்.. அதற்கும் வழி செய்யும் வகையில் பெண்களால் நிர்வகிக்கும் நிறுவனங்களில் இருந்து பொதுத்துறை நிறுவனங்கள் 3 சதவீதம் பொருட்கள் வாங்குவது கட்டாயம் என்ற விதிமுறை அவர்களை உற்சாகப்படுத்தி உற்பத்தியை பெருக்க உதவி செய்யும்.

இதற்கு இணையாக உள்நாட்டில் உள்ள பெரிய நிறுவனங்களுக்கும் இது போன்ற விதிமுறையை அமல்படுத்தினால் மேலும் பலன் கொடுக்கும். உதாரணமாக திருச்சி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலனா சிறு, குறு நிறுவனங்கள் பெல் நிறுவனத்தின் கிளைகளாகத்தான் உள்ளன. பெல் வளமாக செயல்பட்டால் தான் இந்த நிறுவனங்களுக்கும் வாழ்வு கிடைக்கும். இந்த நிறுனங்களில் 97 சதவீதம் அமைப்பு சாராத நிறுவனங்கள் அவற்றை ஒருங்கிணைத்து பதிவு செய்ய நடவடிக்கை எடுத்தால் தான் கடன் அறிவிப்பின் பலன் முழுமையாக கிடைக்கும்.

அதே போல திறன் மிகுந்த ஊழியர்கள் உருவாக்குவது, அதிக நவீன கருவிகளை சிட்கோ, சிப்காட் போன்ற அமைப்புகள் வாங்கி வைத்து அவற்றை அப்பகுதியில் உள்ள தொழிற்சாலைகள் பயன்படுத்த வாய்ப்பு வழங்குவது போன்ற அனைத்து நடவடிக்கைகளையும் ஒருங்கிணைத்து செயல்படுத்தும் பொது 6கோடியே 30 லட்சம் நிறுவனங்களும் பலன் பெறும். அதன் மூலம் நாட்டின் மக்கள் தொகையில் 10 சதவீதம் பேர் வாழ்க்கை பலன் கிடைக்கும்.

பிரதமர் மோடி அறிவித்தாலும் இதை செயல்படுத்துவது வங்கிகள் வசம் தான் உள்ளது. கடன்கள் வழங்க வழக்கமான விதிமுறைகள் இருந்தால் வங்கிகள் இது போன்ற திட்டத்தை செயல்படுத்த தயக்கம் காட்டும். அதற்கு ஏற்ப வங்கிகளின் விதிமுறைகளிலும் மாற்றம் அவசியம். நுண், சிறு, குறு, மற்றும் நடுத்தர தொழில்நிறுவனங்களுக்கு தேவை ஒட்டுமொத்தமான உதவி, அது எளிதில் கிடைக்கும் போது தான் அவை தலைநிமிர முடியும்.

நேற்று முன் தினம் மோடி அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார். அது எந்த வகையில் அமல்படுத்தப்படும் என்று .தெரிய சிறிது காலம் எடுக்கும். அதற்குள் நம் அறவு ஜீவிகள் இதில் பல குற்றம் குறைகளைக் கண்டறிந்து பெரிது படுத்துவார்கள். தேர்தல் நெருங்கி விட்ட வேளையில் இது மோடிக்கு நல்ல பலனை கொக்குமா என்பது சந்தேகம் தான். அப்படி நல்ல முடிவை கொடுத்தால் கடன் அறிவிப்பு அவர் களங்கத்தை துடைத்தது என்று அகம் மகிழ்ந்து கொள்ள முடியும்.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.