நாட்டின் முதலாவது நீர்வழிப்பாதை - வாரணாசியில் தொடங்கி வைக்கிறார் பிரதமர்

  Newstm Desk   | Last Modified : 04 Nov, 2018 09:30 am
indias-first-waterways-all-set-to-be-launched-soon

மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் இருந்து உத்தரப் பிரதேச மாநிலம், வாரணாசிக்கு கங்கை நதி வழியாக சரக்குப் போக்குவரத்து தொடங்கவுள்ளது. இதற்காக தயாரிக்கப்பட்டுள்ள 16 கண்டெய்னர்கள் வாரணாசிக்கு கொண்டு வரப்படவுள்ளன. அவற்றை பிரதமர் நரேந்திர மோடி, வரும் 12ம் தேதி நாட்டுக்கு அர்ப்பணிக்கவுள்ளார் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

சாலையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், ஆறுகள், பாசனக் கால்வாய்கள் வழியாக நீர்வழிப் போக்குவரத்தை தொடங்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த வகையில், கொல்கத்தா முதல் வாரணாசி வரையில், கங்கை நதியில் அமைவது நாட்டின் முதலாவது நீர்வழிப்பாதை என அறிவிக்கப்பட்டுள்ளது.

வாரணாசியில் இருந்து இயக்கப்படும் சிறிய ரக கப்பல் மூலமாக, 140 லாரிகளுக்கான தேவையை குறைக்க முடியும் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மேலும், சாலைப் போக்குவரத்தைக் காட்டிலும், நீர்வழிப்பாதைகளில் சரக்குகளைக் கொண்டு செல்வதால் எரிபொருள் செலவினத்தில் சேமிப்பு ஏற்படும். நாடெங்கிலும் சுமார் 14,500 தொலைவுக்கு நீர்வழிப்பாதை அமைப்பதற்கான சாத்தியக்கூறு இருப்பதாக மத்திய அரசு வரையறை செய்துள்ளது. 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close