மனைவியிடம் விவாகரத்து கோரும் தேஜ் பிரதாப் யாதவ் - தந்தை லாலு பிரசாத்துடன் சந்திப்பு

  Newstm Desk   | Last Modified : 04 Nov, 2018 09:56 am
tej-pradap-meets-lalu-explains-about-divorce-decision

பிகார் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சித் தலைவருமான லாலு பிரசாத் யாதவை, அவரது மகன் தேஜ் பிரதாப் யாதவ், ராஞ்சியில் உள்ள மருத்துவமனையில் நேற்று சந்தித்துப் பேசினார். தனது மனைவியிடம் இருந்து விவகாரத்து கோரி நீதிமன்றத்தில் தேஜ் பிரதாப் யாதவ் மனு தாக்கல் செய்திருக்கும் நிலையில், லாலுவுடனான அவரது சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது. 

மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் சிறை தண்டனை பெற்ற லாலு பிரசாத், உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.  இதற்கிடையே, அவரது மூத்த மகனும், முன்னாள் அமைச்சருமான தேஜ் பிரதாப் யாதவுக்கு கடந்த மே மாதம் திருமணம் நடைபெற்றது. 

திருமணம் முடிந்து 6 மாதங்கள் கூட கடக்காத நிலையில், தேஜ் பிரதாப் யாதவ் விவகாரத்து கோரியுள்ளார். அதுதொடர்பான மனு, வரும் 29ம் தேதி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது. இந்நிலையில், லாலுவை மருத்துவமனையில் சந்தித்த அவர், சுமார் இரண்டு மணி நேரம் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “விவாகரத்து முடிவை திரும்பப் பெறும் பேச்சுக்கே இடமில்லை. மூச்சு திணறக்கூடிய சூழலில் ஒருவர் வாழ்க்கை நடத்த முடியாது’’ என்றார்.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close