காவல்துறை கட்டுப்பாட்டில் சபரிமலை

  Newstm Desk   | Last Modified : 04 Nov, 2018 10:57 am
sabarimalai-comes-under-police-control

சபரிமலை ஐயப்பன் கோயில், மாதாந்திர பூஜைக்காக நாளை திறக்கப்படவுள்ள நிலையில், அப்பகுதி முழுவதும் காவல்துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய இரு தினங்களுக்கு கோயில் நடை திறக்கப்படும்.

கடந்த மாதம் கோயில் திறக்கப்பட்டபோது, அனைத்து வயதுப் பெண்களும் சபரிமலையில் வழிபாடு நடத்தலாம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை அடிப்படையாகக் கொண்டு, 10க்கும் மேற்பட்ட பெண்கள் கோயிலுக்குள் நுழைய முற்பட்டனர். ஆனால், அவர்கள் கோயிலுக்குள் செல்ல எதிர்ப்பு தெரிவித்து பக்தர்கள் மிகக் கடுமையான போராட்டங்களை நடத்திய நிலையில், அப்பெண்கள் திரும்பிச் செல்ல நேரிட்டது.

தற்போது 1,500 காவலர்கள் சபரிமலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பத்தனம்திட்டா காவல் கண்காணிப்பாளர் நாராயணன் தெரிவித்தார். இந்த முறை பெண்கள் யாரேனும் கோயிலுக்குச் செல்ல அனுமதி கோரியுள்ளார்களா? என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், இதுவரை அதுபோன்ற கோரிக்கைகள் வரவில்லை என்றும், உச்சநீதிமன்றத் தீர்ப்பை காவல்துறை செயல்படுத்தும் அதே வேளையில், பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

சபரிமலைக்கு செல்ல தற்போது ஊடகங்களுக்கும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. ஊடகங்கள் நாளைதான் அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

newstm.in

 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close