ராமர் கோயிலே எனது கனவு: மத்திய அமைச்சர் உமா பாரதி

  Newstm Desk   | Last Modified : 04 Nov, 2018 11:00 am
ram-temple-was-my-dream-central-minister-uma-bharti

அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட வேண்டும் என்பதே எனது கனவு என்று பா.ஜ.க. மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான உமா பாரதி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது தரப்பில் எந்தவிதமான உதவி தேவைப்பட்டாலும், அதை செய்வதற்கு தயாராக உள்ளதாகவும் அவர் கூறினார்.

இதுதொடர்பாக தனியார் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்த அவர், ”ராமர் கோயில் கட்டுவதை இலக்காகக் கொண்ட ராம ஜென்மபூமி அந்தோலன் இயக்கத்தில் நானும் பங்காற்றியிருக்கிறேன். அந்த வகையில் என் மீதும், மூத்த தலைவர் அத்வானி மீதும் வழக்கு நிலுவையில் இருக்கிறது. அதற்காக பெருமைப்படுகிறேன்’’ என்றார்.

அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வேண்டும் என்று பா.ஜ.க. மூத்த தலைவர்கள் பலரும், அதன் கூட்டணிக் கட்சித் தலைவர்களும் சமீப காலமாக வலியுறுத்தி வருகின்றனர். குறிப்பாக, கோயில் கட்டுவது தொடர்பாக அவசரச் சட்டம் கொண்டுவர வேண்டும் என்பது கூட்டணிக் கட்சிகள் மற்றும் தோழை இயக்கங்களின் கோரிக்கையாக இருக்கிறது. இந்நிலையில், மத்திய அமைச்சர் உமா பாரதியும் ராமர் கோயில் கட்ட ஆதரவு தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. 

newstm.in


 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close