தீவிரவாதிகள் என சந்தேகம் - அஸ்ஸாமில் இருவர் அடித்துக் கொலை

  Newstm Desk   | Last Modified : 04 Nov, 2018 12:48 pm
assam-two-suspected-militants-lynched-by-people

அஸ்ஸாம் மாநிலத்தில் ஆயுதங்களுடன் வந்த இரு நபர்களை, தீவிரவாதிகள் என்ற சந்தேகத்தின் பேரில் கிராம மக்கள் அடித்துக் கொலை செய்தனர். அந்த நபர்களிடம் இருந்து 6 துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டிருக்கின்றன.

இங்குள்ள துன்சுகியா மாவட்டத்தில், வங்காள மொழி பேசும் 5 தொழிலாளர்களை மர்ம நபர்கள் கடந்த ஒன்றாம் தேதி மர்ம நபர்கள் சுட்டுக் கொன்றனர். அவர்களை, அஸ்ஸாம் ஐக்கிய விடுதலை முன்னணி என்ற தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்தவர்களே சுட்டுக் கொன்றதாக செய்திகள் வெளியாகின. ஆனால், அந்த இயக்கம், புகாருக்கு மறுப்பு தெரிவித்தது.

இந்நிலையில், அஸ்ஸாம்-மணிப்பூர் எல்லையை ஒட்டியுள்ள கச்சார் மாவட்டத்தில், மர்ம நபர்கள் இருவர் கிராம மக்களிடம் வழி கேட்டுள்ளனர். அவர்கள் ஆயுதங்களுடன் இருப்பதை பார்த்து சந்தேகம் அடைந்த பொதுமக்கள் அவர்களை அடித்து உதைத்தனர். இதில், படுகாயமடைந்த அந்த இருவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தனர். 

கொல்லப்பட்ட நபர்களிடம் இருந்து 2 ஏகே-56 துப்பாக்கிகள், சீன தயாரிப்பிலான இயந்திர துப்பாக்கி மற்றும் கையெறி குண்டு, இரண்டு ரைபில்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளன. கச்சார் மாவட்டத்தை ஒட்டிய பகுதிகளில் துடிப்புடன் செயல்பட்டு வரும், நாகாலாந்து தேசிய சமூகக் கவுன்சில் என்ற தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்களாக அவர்கள் இருக்கக் கூடும் என்று சந்தேகிக்கப்படுகிறது.

newstm.in

 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close