பாகிஸ்தானுக்கு உளவுத் தகவல் அளித்ததாக ராணுவ வீரர் கைது

  Newstm Desk   | Last Modified : 04 Nov, 2018 12:52 pm
bsf-jawan-arrested-for-revealing-secret-info-to-pakistan

பாகிஸ்தானுக்கு உளவுத் தவல்களை அளித்ததாக, இந்திய ராணுவத்தின் எல்லைப் பாதுகாப்புப் படைப் பிரிவைச் சேர்ந்த வீரரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். எல்லைப் பாதுகாப்பு படையின் 29வது பட்டாலியனுக்கான துணை கமாண்டோ, எழுத்துப்பூர்வமாக அளித்த புகாரின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட ஷேக் ரியாசுதீன் என்ற ரியாஸ், மகாராஷ்டிர மாநிலம், லத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆவார். இவர் தனது செல்போனை பயன்படுத்தி ஃபேஸ்புக் மற்றும் இன்னபிற சமூக வலைதளங்கள் மூலமாக, பாகிஸ்தானின் உளவு அமைப்புடன் தொடர்புடைய மிர்ஸா பைசலுக்கு ரகசியத் தகவல்களை அனுப்பி வந்ததாகப் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. எல்லைப் பகுதியில் தகவல் தொடர்புக்கான வயர்களை பதிப்பது, தெருக்களுடைய கேமரா பதிவுகள், அதிகாரிகளின் தகவல் தொடர்பு எண்கள் உள்ளிட்டவற்றை மிர்ஸா பைசலுடன் பகிர்ந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

அலுவலக ரகசியச் சட்டம் மற்றும் தேசிய பாதுகாப்புச் சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ், ஷேக் ரியாசுதீன் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவரை நீதிமன்ற அனுமதியுடன் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். இரண்டு செல்போன்கள், 7 சிம் கார்டுகள் உள்ளிட்டவை ரியாசுதீனிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close