மகன் பட்டாசு வெடித்ததால் தந்தை கைது !

  Newstm Desk   | Last Modified : 04 Nov, 2018 02:51 pm
father-arrested-fir-launched-after-neighbours-report-children-bursting-firecrackers

டெல்லியில் பட்டாசு வெடிக்க விதிக்கப்பட்டுள்ள தடையை மீறி சிறுவன் பட்டாசு வெடித்ததால் அவரது தந்தையை காவல்துறையினர் கைது செய்தனர். 

தலைநகர் டெல்லியில் காற்று மாசு காரணமாக  பட்டாசு வெடிக்க கடந்த ஆண்டு தடை விதிக்கப்பட்ட தடை இந்தாண்டும் இருக்கும் என்று உச்சநீதிமன்றம் வழக்கு தொடரப்பட்டது. இதில் சில நிபந்தனைகளுடன் பட்டாசுகளை வெடிக்கலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதன்படி நாடு முழுவதுமே இரண்டு மணி நேரம் தான் பட்டாசு வெடிக்க வேண்டுமெனவும் தீர்ப்பு வழங்கப்பட்டது.

டெல்லியில் நவம்பர் தொடக்கம் முதல் 10ம் தேதி வரை காற்றின் மாசுபாடு குறித்து அளவீடு செய்ய வேண்டும் என மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திற்கு உச்சநீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது. மேலும் டெல்லி மக்கள் புகை அதிக வெளியாகும் வாகனங்களை பயன்படுத்த வேண்டாம் என்றும், பட்டாசுகளை வெடிக்காமல் தீபாவளி கொண்டாடுமாறும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் கேட்டுக்கொண்டுள்ளது. 

இந்நிலையில் டெல்லி காசிபூர் பகுதியில் மகன் பட்டாசு வெடித்ததால் தந்தை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நவம்பர் 1ம் தேதி சிறுவன் ஒருவர் பட்டாசுகளை வெடித்துள்ளான். பட்டாசு வெடிக்கக்கூடாது என்று பக்கத்துவீட்டார்கள் எச்சரிகை விடுத்துள்ளனர். இதனையடுத்து அவர்கள் காவல்துறைக்கு புகார் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சிறுவனின் தந்தையை கைது செய்தனர். அவர் மீதுமுதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.  

பட்டாசு வெடிக்க விதிக்கப்பட்டுள்ள தடையை மீறியதற்கு கைது நடப்பது இதே முதல்முறையாகும். 

 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close