காஷ்மீர் துப்பாக்கிச் சூட்டில் இறந்த ஒருவர் தீவிரவாதி அல்ல: போலீஸ்

  Newstm Desk   | Last Modified : 04 Nov, 2018 06:52 pm
kashmir-shootout-one-civilian-killed

ஜம்மு காஷ்மீரின் ஷோபியான் பகுதியில் நேற்று  ராணுவத்துடன் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில், இரண்டு தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியான நிலையில், தற்போது அதில் இறந்தது பொதுமக்களில் ஒருவர் என தெரிய வந்துள்ளது. 

ஷோபியனின் குட்போரா பகுதியில் நேற்று பாதுகாப்பு படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சூடு நிகழ்ந்தது. இதில் இரண்டு தீவிரவாதிகள் குண்டடி பட்டு இறந்ததாகவும், மேலும் இரண்டு பேர் அங்கிருந்து தப்பிவிட்டதாகவும் முதலில் தகவல்கள் வெளியாகின. 

சம்பவத்தை தொடர்ந்து, இன்று இறந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு அடையாளம் காணப்பட்டன. அதில் ஒருவர் தீவிரவாதி முஹம்மது இர்ஃபான் பட் என்றும், மற்றொருவர் அந்த பகுதியை சேர்ந்த ஷாஹித் அஹ்மத் மீர் எனவும் கண்டுபிடிக்கப்பட்டது. மீர் தீவிரவாதி அல்ல என போலீசார் தெரிவித்துள்ளனர். மிர்ரின் உடலை காவல்துறையினர் அவரது குடும்பத்திடம் வழங்கியுள்ளனர். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close