சபரிமலையில் இன்று நடைதிறப்பு: பலத்த போலீஸ் பாதுகாப்பு!

  Newstm Desk   | Last Modified : 05 Nov, 2018 08:34 am
sabarimala-temple-to-re-open-today

சபரிமலை கோயிலில் இன்று மீண்டும் நடை திறக்கப்படுவதையொட்டி 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சபரிமலைக்கு எல்லா வயது பெண்களும் செல்லலாம் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக மாநிலம் முழுவதும் தொடர்ந்து போராட்டம் நடைபெற்றது. பம்பை, நிலக்கல்மற்றும் சன்னிதானப் பகுதிகளில் பக்தர்கள் நின்று கொண்டு ,ஐயப்பனை தரிசிக்க வரும் பெண்களை தடுத்து நிறுத்தினர். இதில் போராட்டக்காரர்களும், கோயிலுக்கு செல்ல முயன்ற பெண் பத்திரிகையாளர்களும் தாக்கப்பட்டனர்.

இந்நிலையில் சித்திரை ஆட்ட விசேஷத்தை முன்னிட்டு இன்று மாலை 5.30 மணி முதல் நவம்பர் 6 இரவு 10.30 மணிவரை சபரிமலை  ஐயப்பன் கோவில் நடை திறக்கப்படுகிறது. மீண்டும் நடைதிறக்க இருப்பதால் பலர்  போரட்டத்தில் ஈடுபட வாய்ப்பு உள்ளது. இதனால் பம்பை , நிலக்கல் , இல்வுங்கல் மற்றும் சன்னிதானம் பகுதிகளில்144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

சபரிமலைக்கு வரும் பக்தர்கள் அனைவரும் சோதனைக்கு பிறகே பம்பை பகுதியில் நுழைய முடியும் என்று பத்தனம் திட்டா மாவட்ட காவல் அதிகாரி நாராயணன் தெரிவித்துள்ளார். இன்று இரவு முதல் 1,500 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடஉள்ளனர். சபரிமலை செல்லும் வழியில் யாரும் முகாமிட அனுமதிக்கப்படவில்லை . ஐயப்பனை தரிசிக்க வரும் பெண்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும்என்று காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close