வாரணாசி வந்தடையும் இந்தியாவின் முதல் உள்நாட்டு கப்பல்!- பிரதமர் மோடி வரவேற்கிறார்

  Padmapriya   | Last Modified : 05 Nov, 2018 09:01 am
india-s-first-inland-vessel-with-cargo-of-16-trucks-heads-for-varanasi

இந்தியாவின் முதல் உள்நாட்டு கப்பலான ரவீந்திரநாத் தாகூர் கப்பல் 16 சரக்கு பெட்டிகளுடன் வரும் நவம்பர் 12ஆம் தேதி வாரணாசி வந்தடைகிறது. இதனை பிரதமர் நரேந்திர மோடி வரவேற்கிறார். 

உள்நாட்டு நீர்வழி போக்குவரத்துத் துறையில் பெரிய மைல் கல்லாக, 16 சரக்கு பெட்டிகளுடன் செவ்வாய்க்கிழமை கொல்கத்தா துறைமுகத்திலிருந்து கங்கைக் கரைகளில் தேசிய நீர்வழிப் பாதை-1ன் வழியாக புறப்பட்ட முற்றிலும் உள்நாட்டு கட்டுமானத்தால் ஆனா முதல் கப்பலான ரவீந்திரநாத் தாகூர் பயணித்து வருகிறது.  இந்தக் கட்டப் வரும் நவம்பர் 12ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடியின் வாரணாசி தொகுதிக்கு வந்தடைகிறது. 

அதோடு வாரணாசியில் சாகர்மாலா திட்டத்தின்கிழ் புதிதாக அமைக்கப்பட்டுள்ள முனையத்தையும் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கிறார். கொல்கத்தா முதல் வாரணாசி வரையில், கங்கை நதியில் அமையும் இது நாட்டின் முதலாவது நீர்வழிப்பாதை முனையமாகும். 

பிரதமர் நரேந்திர மோடியின் மற்றொரு கனவுத் திட்டமான சாகர்மாலா, இந்தியாவில் உள்ள 7,500 கி.மீ. நீள கடற்கரைப் பகுதியை மேம்படுத்தி 14,500 கி.மீ. தூரத்துக்கு நீர் வழித் தடங்களை உருவாக்க போடப்பட்டவை ஆகும். மேலும், இத்திட்டத்தின் பயனாக ஒரு கோடி வேலை வாய்ப்புகள் உருவாகும் நிதின் கட்கரி ஏற்கெனவே குறிப்பிட்டுள்ளார். 

இதனை பெருமிதத்துடன் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்ட, மத்திய நீர்வழிப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்காரி, சுதந்திரத்துக்கு பிறகு இந்திய உள்நாட்டுத் தயாரிப்பிலான இந்தக் கப்பல் மிக முக்கிய மைல்கல் எனக் குறிப்பிட்டார். 

இவற்றுக்கும் மேலாக கங்கை, பிரம்மபுத்ரா உள்ளிட்ட பல்வேறு நீர்வழிப் பாதைகளில் பணிகள் வேகமாக நடைபெற்று வருவதால், அவற்றின் நீர்வழிப் போக்குவரத்து திறன் மேம்படுத்தப்படும். உலக வங்கி உதவியுடனான நீர்வழிப் போக்குவரத்து நிறுவனம் என பொருள்படும், 'ஜல் மார்க் விகாஸ் திட்டம்' கங்கையாற்றின் ஹால்டியா முதல் அலகாபாத் வரையிலான தூரத்தை 1,500 முதல் 2,000 டன் வரை எடையுள்ள கப்பல் போக்குவரத்தை ஏற்கும் அளவிற்கு அமைக்க உதவும். வாரணாசி, சாஹிப் கன்ஜ், ஹால்டியா ஆகிய இடங்களில் உள்ள பல்வகை முனையங்கள் அமைப்பு பணிகள் மற்றும் இந்தப் பகுதியில் தேவையான அடிப்படை வசதி பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன.  இவற்றின்கீழ் 266 துறைமுகங்கள்  ரூ.1.45 லட்ச கோடி செலவில் அடுத்த பத்து ஆண்டுகளில் மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.  

கிழக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் இந்த நீர்வழி போக்குவரத்து வளர்ச்சி பெற்றால், போக்குவரத்தில் மிகப் பெரிய முன்னேற்றத்தைக் காண முடியும் என்று மத்திய கப்பல் துறை செயலாளர் கோபால் கிருஷ்ணா கூறினார். 

Newstm.in 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close