அயோத்தியில் ராமர் கோயில் கட்ட இஸ்லாமியர்கள் உதவ வேண்டும்: சுஷில் மோடி

  Newstm Desk   | Last Modified : 05 Nov, 2018 10:01 am
forget-past-help-us-build-temple-sushil-modi-to-muslims-on-ayodhya

அயோத்தியில் ராமர் கோயில் கட்ட இஸ்லாமியர்கள் உதவ வேண்டும் என்றும் நடந்ததை அவர்கள் மறந்துவிட வேண்டும் என்றும் பீகார் மாநில துணை முதல்வரும் பா.ஜ.க தலைவருமான சுஷில் குமார் மோடி வலியுறுத்தி உள்ளார்.

பாட்னாவில் நேற்று பா.ஜ.க தலைவர் சுஷில் குமார் மோடி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, "இஸ்லாமியர்கள் நடந்தை மறந்து விட்டு அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக எங்களுக்கு உதவி செய்ய வேண்டும். பள்ளிவாசலை எங்கு வேண்டுமானாலும் கட்டிக் கொள்ளலாம். ஆனால், ராமர் கோயிலை அவர் பிறந்த இடத்தில் மட்டும்தான் கட்ட முடியும்.

கர்நாடகத்தில் ஏற்பட்ட அரசியல் சிக்கலை நள்ளிரவில் விசாரிக்க உச்ச நீதிமன்றத்திற்கு நேரம் இருக்கிறது. அர்பன் நக்சல் விவகாரத்தை விசாரிக்க முன்னுரிமை அளிக்கிறது. ஆனால் ராமர் கோயில் வழக்கை உச்ச நீதிமன்றம் ஒத்திப் போடுகிறது. அதற்கு ஏன் முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை" என்று தெரிவித்தார். 

அயோத்தி ராமர் கோயில் விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணை 2019 ஆண்டு ஜனவரி மாதம் நடைபெறும் என்று உச்சநீதிமன்றம் கடந்த மாதம் 29ம் தேதி தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. 

 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close