ஒருமித்த கருத்தின் அடிப்படையில் ஸ்ரீராமனுக்கு கோவில்: விஷ்வ இந்து பரிஷத் அறிவிப்பு

  Newstm Desk   | Last Modified : 05 Nov, 2018 12:06 pm

no-compromise-on-law-for-ram-mandir-says-hindu-seers-conclave

அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணி அடுத்த மாதம் தொடங்கும் என்று வி.ஹெச்.பி. என்று அழைக்கப்படும் விஸ்வ ஹிந்து பரிஷத் அறிவித்துள்ளது. மேலும் அந்தக் கோவில் கட்டமைக்கும் பணியானது சட்டத்தின் உதவியுடனோ அல்லது அவசர சட்டத்தின் மூலமாகவோ கட்டப்பட மாட்டாது என்றும், இருதரப்பும் ஏற்றுக்கொள்ளும் ஒருமித்த கருத்தின் அடிப்படையிலேயே கோவிலைக்  கட்டமைப்போம் என்றும் விஷ்வ இந்து பரிஷத் அறிவித்துள்ளது. 

அகில பாரதிய சந்த் சமிதி எனும் அகில பாரத துறவியர் பேரவையின் மாநாடு டெல்லியில் நேற்று தொடங்கியது.  இதில், விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் தலைவர்கள், பல்வேறு இந்து சமய மடாதிபதிகள், துறவிகள் மற்றும் இந்து அமைப்புகளைச் சேர்ந்த தலைவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் மூத்த தலைவர் ராம் விலாஸ் வேதாந்தி, அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணி அடுத்த மாதம் தொடங்கும் என்று அக்கூட்டத்தில் அறிவித்தார். அதுமட்டுமின்றி சட்டத்தின் மூலமாகவோ, அவசர சட்டத்தின் உதவியுடனோ ராமருக்கு கோவில் கட்டப்பட மாட்டாது. என்றும், மாறாக இருதரப்பும் எய்த உள்ள ஒருமித்த கருத்தின் அடிப்படையில் மட்டுமே ராமருக்கு கோவில் கட்டுவோம் என்று அறிவித்தார். 

அதோடு, அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படும் என்றும் பதிலுக்கு லக்னோவில் மசூதி கட்டித் தரப்படும். சட்டரீதியான பிரச்சினைகளால் அதற்கு இடையூறுகள் நேர்ந்தால் வன்முறைகள் தலைவிரித்தாடும் என்று அவர் கூறினார்.

3 ஆயிரத்து 500 பேர் கலந்து கொண்ட இந்த மாநாட்டில் ஹிந்து மதம் மற்றும் கலாசாரம் சந்தித்து வரும் பல்வேறு சவால்கள் மற்றும் பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டது அதோடு இன்று முக்கிய தீர்மானங்கள் பல, துறவியர் பேரவையினால் நிறைவேற்றப்பட உள்ளன. 

இதனிடையே சர்ச்சைக்குரிய நிலத்தை யார் உரிமை கோருவது என்பது தொடர்பான வழக்கு விசாரணையை கடந்த வாரம், வரும் ஜனவரி மாதத்துக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

Newstm.in 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close