ராமர் கோயில் கட்டுவதை யாராலும் தடுக்க முடியாது: மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்

  Newstm Desk   | Last Modified : 05 Nov, 2018 03:14 pm
nothing-can-stop-ram-temple-construction-says-union-minister-giriraj-singh

அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படுவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது என்று  மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

பீகார் மாநிலம் நவடாவில் மத்திய சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்நிறுவனங்கள் துறை அமைச்சர் கிரிராஜ் சிங் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ‘‘மத்திய அரசும் நீதிமன்றமும் ராமர் கோயில் கட்டுவதற்கான வழி காண வேண்டும் என்று மக்கள் விரும்புகின்றனர். இந்த நாட்டின் 100 கோடிக்கும் மேற்பட்ட மக்களின் நம்பிக்கையின் அடையாளமாக ராமர் விளங்குகிறார்.

மக்களின் உணர்வுகள் புறக்கணிக்கப்படுவதால் பொறுமை இழந்து வருகின்றனர். அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படுவதை உலகின் எந்த சக்தியாலும் தடுக்க முடியாது. அயோத்தியில் ராமர் கோயில் கட்டக்கோரி நாடாளுமன்றத்தில் தனிநபர் மசோதா கொண்டுவரப்போவதாக பா.ஜ.க எம்பி ராகேஷ் சின்ஹா கூறியுள்ளார். ராமர் கோயில் பிரச்சினையில் காங்கிரஸ் கட்சி தனது நிலையை தெளிவுபடுத்த வேண்டும்’’ என்றார்.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close