ரயில்வே பணியாளர்கள் மீது ரயில் மோதி 3 பேர் பலி!

  Newstm Desk   | Last Modified : 05 Nov, 2018 06:26 pm
train-mows-down-3-railway-workers

உத்தர பிரதேச மாநிலத்தின் ஹாடோய் பகுதியில், ரயில் தடத்தில் பணியில் ஈடுபட்டிருந்த ரயில்வே ஊழியர்கள் 3 பேர் மீது வேகமாக வந்த ரயில் மோதியது. இதில் 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

 ஹாடோய் பகுதியில் உள்ள சண்டிலா, உமர்டலி ரயில் நிலையங்களுக்கு நடுவே சில ரயில் பணியாளர்கள் பராமரிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த அகல் தக்ட் எக்ஸ்பிரஸ், பணியாளர்கள் மீது மோதியது. இதில் அனைவரும் உடல் சிதறி பலியானார்கள். 

சம்பவ இடத்திற்கும் விரைந்த அதிகாரிகள், 3 பணியாளர்கள் இறந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். முதலில் 4 பேர் இறந்ததாக கூறப்பட்டது. ஆனால், உடல்கள் மிகவும் மோசமாக சேதமடைந்துள்ளதால்,  4வது நபர் இறந்தரா என்பது குறித்து சரியாக தெரியவில்லை என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close