பிரதமர் மோடி - தென்கொரியா அதிபர் மனைவி சந்திப்பு

  Newstm Desk   | Last Modified : 05 Nov, 2018 07:08 pm
pm-modi-meets-first-lady-of-south-korea-kim-jung-sook

அயோத்தி தீபவிழாவில் பங்கேற்பதற்காக இந்தியா வந்துள்ள தென்கொரியா அதிபரின் மனைவி கிம் ஜங்-சூக் இன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். 

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள அயோத்தியில் 4-ம் தேதி முதல் 6-ம் தேதி வரை மூன்று நாட்கள் தீபஉற்சவம் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வில், உத்தரப்பிரதேச ஆளுநர் ராம் நாயக், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.

நாளை (6ஆம் தேதி) சுமார் 3 லட்சம் அகல் விளக்குகள் ஏற்றி வழிபாடு நடத்தப்படும் பிரமாண்டமான தீப உற்சவத்தில் தென்கொரிய அதிபர் மூன் ஜே இன் மனைவி கிம் ஜங்-சூக் பங்கேற்கவுள்ளார்.  இதற்காக சிறப்பு விமானம் மூலம் நேற்றிரவு டெல்லி வந்தடைந்த கிம் ஜங்-சூக் இன்று டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார்.

 

நேற்றிரவு டெல்லி வந்து சேர்ந்த கிம் ஜங்-சூக் இன்று வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜை சந்தித்துப் பேசினார். இன்று மாலை லக்னோ வந்து சேரும் அவருக்கு முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் இரவு விருந்து அளித்து உபசரிக்கிறார். 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close