சபரிமலை கோயில் மீண்டும் திறப்பு

  Newstm Desk   | Last Modified : 05 Nov, 2018 07:25 pm
sabarimalai-opened-now-amid-tight-security

பலத்த போலீஸ் பாதுகாப்பு, கமாண்டோ படையினரின் கண்காணிப்பு, 4 பேருக்கு மேல் ஒன்றுகூடுவதை தடுக்க 144 தடையாணை என ஏராளமான முன்னேற்பாடுகளுடன் சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று மாலையில் நடை திறக்கப்பட்டது.

இன்று முதல் நாளை நள்ளிரவு வரையில் கோயில் நடை திறந்திருக்கும். மாதாந்திர பூஜைக்காகவும், சித்ரா அஷ்ட விஷேச பூஜைக்காகவும் நடை திறக்கப்பட்டுள்ளது. இதுவரையில் எந்தப் பகுதியிலும் போராட்டம் நடைபெறவில்லை. நிலக்கல் மற்றும் பம்பை ஆகிய அடிவாரப் பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான ஆண் பக்தர்கள் வழிபாடு நடத்துவதற்காக சன்னிதானத்தை நோக்கி பயணம் மேற்கொண்டுள்ளனர்.

இதற்கிடையே, தனது கணவர் மற்றும் இரு குழந்தைகளுடன் வந்த 26 வயதுப் பெண், சபரிமலைக்குச் செல்ல அனுமதி கோரி போலீஸாரிடம் அனுமதி கோரியுள்ளார். அந்தப் பெண்ணின் விவரங்களை போலீஸார் சரி பார்த்து வருகின்றனர். எனினும், அவருக்கு அனுமதி வழங்கப்படுமா என்பது தெரியவில்லை.

முன்னதாக, சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் வழிபாடு நடத்தலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, கடந்த மாதம் நடை திறக்கப்பட்டபோது, சபரிமலைக்கு வந்த 10க்கும் மேற்பட்ட இளம்வயது பெண்கள், பக்தர்களின் போராட்டம் காரணமாக திரும்பிச் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

newstm.in

 

 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close