டெல்லியில்  உத்தரவு  மீறி பட்டாசு வெடித்த 15 பேர் கைது! 

  சுஜாதா   | Last Modified : 06 Nov, 2018 08:06 am
2500-kg-of-crackers-seized-15-people-arrested

தீபாவளி பண்டிகையன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் விதித்துள்ள உத்தரவு காரணமாக டெல்லியில் இதுவரை 2508 கிலோ பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டு, மேலும் 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

உச்ச நீதிமன்றம் இரவு 8 முதல் இரவு 10 மணி வரை இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க விதித்துள்ள உத்தரவு  மீறி வெடித்ததற்காக டெல்லியில் 18 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு மேலும் 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், நவம்பர் 1-ஆம் தேதி முதல் திங்கள்கிழமை( 5 -11 -2018) வரை  2,508 கிலோ பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக  போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, தமன்சீப் என்பவர் கடந்த புதன்கிழமை இரவு தொடர்ந்து பட்டாசு  வெடித்ததாக தீப் பந்து என்பவர் போலீஸில் புகார் அளித்துள்ளார். இதனை தொடர்ந்து விசாரணைக்குப் பின்னர் தமன்சீப் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close