ஆப்ரேஷன் கிரீன்ஸ்-க்கான நெறிமுறைகள்: மத்திய அமைச்சகம் வெளியீடு

  சுஜாதா   | Last Modified : 06 Nov, 2018 09:06 am
ministry-of-food-processing-industries-issues-guidelines-for-operation-greens

மத்திய அமைச்சர்  ஹர்சிம்ரத் கவுர் பதல் தலைமையிலான மத்திய உணவு பதப்படுத்துதல் தொழில் அமைச்சகம் ஆப்ரேஷன் கிரீன்ஸ் அமல்படுத்தவதுற்கான நெறிமுறை உத்திகளுக்கு அனுமதியை வழங்கியுள்ளது.

ஆப்ரேஷன் கிரீன்ஸ், 2018-19-ன் பட்ஜெடின் போது, ரூ. 500 கோடி ஒதுக்கீட்டுடன் அறிவிக்கப்பட்டது. நாடு முழுவதும், அனைத்து காலங்களிலும் டி.ஒ.பி பயிர்கள் என அழைக்கப்படும் தக்காளி, வெங்காயம், உருளைக்கிழங்கு ஆகியவற்றின் விலை ஏற்ற தாழ்வின்றி கிடைப்பதை உறுதி செய்வதே இதன் நோக்கமாகும்.

இதற்கு ஓப்புதல் வழங்கிய அமைச்சர், டி.ஒ.பி பயிர்களின் விலைவாசி ஏற்ற தாழ்வு, நாடுமுழுவதும் விநியோக பிரச்சனையை அதிகரிக்கிறது. இந்த புரட்சிகரமான திட்டம், அனைத்து பங்குதாரர்களிடமும் விவாதிக்கப்பட்டு, டி.ஒ.பி பயிர்களின் விலைவாசியை சரி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார். மேலும், அனைத்து வீடுகளிலும் டி.ஒ.பி பயிர்கள் ஆண்டு முழுவதும் கிடைப்பதை இது உறுதி செய்யும். மத்திய அரசு, டி.ஒ.பி பயிர்கள் உற்பத்தியை அதிகரிக்க சிறப்பு நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது என்று அமைச்சர் கூறினார். 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close