ஜம்மு காஷ்மீர்: 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

  Newstm Desk   | Last Modified : 06 Nov, 2018 10:54 am
two-terrorist-killed-in-jk-encounter

சோபியான் மாவட்டத்தில் 2 தீவிரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகளின் ஊடுருவலை தடுக்க பாதுகாப்பு படையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.இந்த நிலையில், ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தில் உள்ள சஃப்னாக்ரி பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலை அடுத்து அப்பகுதியில் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.

அப்போது பாதுகாப்பு படையினரிடம் இருந்து தப்புவதற்காக பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதற்கு பதிலடி கொடுத்து பாதுகாப்பு படையினரும் துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டனர். சுமார் 1 மணி நேரம் நீடித்த இந்த துப்பாக்கிச்சூட்டில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close