மத்திய அமைச்சருக்கு எதிராக அவதூறு வழக்கு – வேட்டையாளர் நவாப் கான் எச்சரிக்கை

  Newstm Desk   | Last Modified : 06 Nov, 2018 12:48 pm
i-will-file-defamation-case-against-menaka-gandhi-khan

மகாராஷ்டிர மாநிலத்தில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக இருந்த, ஆவ்ணி என்ற பெண் புலி கொல்லப்பட்ட விவகாரத்தில் தன் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை தெரிவிக்கும் மத்திய அமைச்சர் மேனகா காந்திக்கு எதிராக அவதூறு வழக்கு தொடுப்பது குறித்து ஆலோசித்து முடிவு செய்யப்படும் என்று வேட்டையாளர் நவாப் ஷபாத் அலி கான் எச்சரித்துள்ளார்.

ஆவ்ணி மிகுந்த அச்சுறுத்தலை ஏற்படுத்திய நிலையில், அதனை சுட்டுப் பிடிக்க நவாப் கான், அவரது மகன் ஆஷ்கர் உள்ளிட்ட குழுவினரை மகாராஷ்டிர அரசு பணியமர்த்தியது. இறுதியில், அந்தப் பெண் சுட்டுக் கொல்லப்பட்டது.

இதுகுறித்து மத்திய அமைச்சர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், நவாப் கான் இதுவரையில் 3 புலிகள், 10 சிறுத்தைப் புலிகள் மற்றும் சில யானைகளை கொலை செய்திருப்பதாகவும், ஹைதராபாதில் உள்ள தேச விரோதிகளுக்கு அவர் ஆயுதங்களை வழங்கியிருப்பதாகவும் கூறியிருந்தார்.

அமைச்சரின் இப்புகார் குறித்து, தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு நவாப் கான் பதில் அளிக்கையில், “நான் பாரம்பரியமான குடும்பத்தைச் சேர்ந்தவன். என்னை தீவிரவாதி என்றும், தேச விரோதி என்றும் அமைச்சர் கூறியிருக்கிறார். எனது சேவைகளை மாநில அரசுகளே என்னைப் பணியமர்த்தும்போது நான் எப்படி தேச விரோதியாக முடியும்? அமைச்சரின் இந்த விமர்சனம் குறித்து எனது வழக்கறிஞர்களிடம் ஆலோசனை நடத்தவுள்ளேன். அவர்களது அறிவுரையின்படி, அமைச்சருக்கு எதிராக அவதூறு வழக்கு தொடுப்பது குறித்து முடிவு செய்யப்படும்’’ என்றார்.

newstm.in

நன்றி - The Indian Express

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close