மேக் இன் இந்தியா சாதனை: 'செல்போன் விற்பனையில் 94 % உள்நாட்டில் தயாரானவை'

  Padmapriya   | Last Modified : 06 Nov, 2018 03:24 pm
make-in-india-impact-94-per-cent-of-mobiles-sold-in-the-country-now-manufactured-domestically

நடப்பாண்டில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மொபைல் போன் விற்பனையில் மிகப்பெரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. விற்பனையான மொபைல் போன்களில் 94 சதவீதம் இந்தியாவில் தயாரிக்கப்பட்டது என சைபர்மீடியா ஆராய்ச்சி மைய அறிக்கை கூறுகிறது. 

சைபர்மீடியா ஆராய்ச்சி மையம் 'இந்திய மொபைல் ஹேண்ட்செட் சந்தை நிலை அறிக்கை' ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையின்படி, ''இந்தியாவில் தயாரிக்கப்படும் சாதாரண வசதிகள் கொண்ட மொபைல் போன்கள் 9 சதவீதமும், ஸ்மார்ட்போன்களின் விற்பனை 29 சதவீதமும் முதல் காலாண்டில் வளர்ச்சியை கண்டுள்ளது. Feature phone எனப்படும் சாதாரண அன்ட்ராய்டு அல்லாத போன்களின் விற்பனை மட்டும் 24 சதவீதம் உயர்ந்துள்ளது. அதே சமயம்,  பல்வேறு அம்சங்கள் கொண்ட Fusion phones வகைகள் விற்பனையில் 41 சதவீதம் சரிவு ஏற்பட்டுள்ளது. இவை ஒட்டுமொத்த சந்தையின் சரிபாதி இடத்தை பெற்றுள்ளன. 

ஆண்டின் இறுதி காலாண்டில், அனைத்து உள்ளூர் உற்பத்தியாளர்களும் சராச்சரை வளர்ச்சியை கண்டுள்ளனர். ஒப்போ, விவோ மற்றும் ஜியோமி போன்ற பிரதான நிறுவனங்கள் SMT எனப்படும் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதை அடுத்து ரிலையன்ஸின் ஜியோ போனும் இதனை பயன்படுத்த தொடங்கியுள்ளது. 

அதேபோல பிரதான விற்பனையை கைப்பற்றிய லாவா மொபைலும் இதனைக் கொண்டே தயாரிக்கப்படுகிறது.  பண்டிகை கால ஸ்மார்ட் போன் விற்பனைகள் மிகப் பெரிய அளவில் சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.  

மேலும், கவர்ச்சிகரமான சலுகைகள், கேஷ் பேக் ஆஃபர்கள் போன்ற காரணங்களாலும் இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக முன்னணி ஸ்மார்ட்போன் தர மதிப்பீட்டு ஆய்வாளர் ஒருவர் கூறியுள்ளார். 
 

Newstm.in 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close