கர்நாடக இடைத்தேர்தல்: காங்கிரஸ் - ம.ஜ.த கூட்டணி வெற்றி!

  Newstm Desk   | Last Modified : 06 Nov, 2018 02:33 pm
karnataka-bypoll-congress-jds-allaince-wins-in-4-places

கர்நாடகாவில், ஷிமோகா, மாண்டியா, பெல்லாரி ஆகிய 3 மக்களவை தொகுதிகளுக்கும், ராம்நகர், ஜமாகாண்டி ஆகிய 2 சட்டசபை தொகுதிகளுக்கும் கடந்த நவம்பர் 3ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த 5 தொகுதிகளுக்குமான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது. 

இதில் இரண்டு தொகுதிகளில் காங்கிரஸூம், இரண்டு தொகுதிகளில் மதசார்பற்ற ஜனதா தளம், ஒரு தொகுதியில் பா.ஜ.க வெற்றி பெற்றுள்ளது. 

மாண்டியா மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் ம.ஜ.த வேட்பாளர் ஷிவராமகவுடா, பா.ஜ.க வேட்பாளரை விட 3,24,943 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றார். 

பெல்லாரி மக்களவை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் உக்ரப்பா வெற்றி பெற்றுள்ளார். இவர், பா.ஜ.க வேட்பாளர் சாந்தாவைவிட 2,43,161 வாக்குகள் அதிகம் பெற்று பா.ஜ.கவின் கோட்டையை கைப்பற்றியுள்ளார். 

ஷிமோகா மக்களவை தொகுதியில் ம.ஜ.த வேட்பாளர் மதுபங்காரப்பாவை விட 52,148 வாக்கு கூடுதலாக பெற்று பா.ஜ.க வேட்பாளர் எடியூரப்பாவின் மகன் ராகவேந்திரா வெற்றி பெற்றுள்ளார். 

ராம்நகர் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில்  மஜத வேட்பாளர் குமாரசாமியின் மனைவி அனிதா வெற்றி பெற்றுள்ளார். இவர் பா.ஜ.க வேட்பாளர் சந்திரசேகரை 1,09,197 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றுள்ளார்.

ஜமாகாண்டி சட்டப்பேரவை தொகுதியை காங்கிரஸ் வேட்பாளர் சித்து யமகவுடா கைப்பற்றியுள்ளார். பா.ஜ.க வேட்பாளரைவிட 39,480 வாக்குகள் வித்தியாசத்தில் இவர் வென்றுள்ளார். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close