ஷிமோகா தொகுதியை தக்கவைத்துக்கொண்ட பா.ஜ.க! எடியூரப்பா மகன் வெற்றி

  Newstm Desk   | Last Modified : 06 Nov, 2018 03:11 pm

easy-win-for-by-raghavendra-son-of-yeddyurappa-in-shimoga-lok-sabha-bye-poll

கர்நாடக மாநிலம், ஷிமோகா மக்களவைத் தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளர் ராகவேந்திரா 52,148 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். 

கர்நாடக மாநிலத்தின் ஷிமோகா தொகுதி பா.ஜ.க. எம்.பி.யும் அம்மாநில முன்னாள் முதல்வருமான எடியூரப்பா சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றதால் தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார். இதனால் அந்த தொகுதி காலியானது. 

இதையடுத்து, காலியாக இருந்த ஷிமோகா தொகுதியுடன் மற்ற 4 தொகுதிகளுக்கும் சேர்த்து கடந்த நவம்பர் 3ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த 5 தொகுதிகளுக்கும் இன்று வாக்கு எண்ணிக்கையானது நடைபெற்றது. 

இதில், ஷிமோகா தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளர் எடியூரப்பா மகன் ராகவேந்திரா 52,148 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். 

முன்னதாக எடியூரப்பா, தனது மகன் கண்டிப்பாக ஷிமோகா தொகுதியில் 101% வெற்றி பெறுவார் என கூறியிருந்தார். அவர் கூறியபடியே இந்த தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். ஆனால், மொத்தம் 5 தொகுதிகளில் இந்த ஒரு தொகுதியில் மட்டுமே பா.ஜ.க வெற்றி பெற்றுள்ளது.  இவரை எதிர்த்து காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் முதல்வர் பங்காரப்பாவின் மகன் மது பங்காரப்பா போட்டியிட்டார். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close