நீரவ் மோடியின் ரூ.56 கோடி துபாய் சொத்துக்களை முடக்க அமலாக்கத்துறை நடவடிக்கை!

  Newstm Desk   | Last Modified : 06 Nov, 2018 09:56 pm
nirav-modi-s-56-crores-dubai-assets-to-be-attached-by-ed

வைர வியாபாரி நிரவ் மோடியின் 56 கோடி ரூபாய் மதிப்பிலான 11 துபாய் சொத்துக்களை பஞ்சாப் நேஷனல் வாங்கி வழக்கில் சேர்க்க அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. இது தொடர்பாக துபாய் அதிகாரிகளிடம் கோரிக்கை அனுப்பப்பட்டுள்ளது. 

பஞ்சாப் நேஷனல் வங்கியிடம் இருந்து 13,500 கோடி ரூபாய் அளவில் கடன் மோசடி செய்த வழக்கில், அமலாக்கத்துறை வைர வியாபாரி நிரவ் மோடியின் மீது வழக்கு தொடுத்து விசாரித்து வருகிறது. மே மாதம், நிரவ் மோடி மற்றும் அவரது மாமா மெஹுல் சோக்சி மீது பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இந்த விவகாரம் வெளியே வரும் முன் நிரவ் மோடி தனது குடும்பத்தினருடன் நாட்டை விட்டு வெளியேறினார்.

கடந்த அக்டோபர் மாதம், நிரவ் மற்றும் மெஹுல் சோக்சிக்கு சொந்தமான ரூ.225 கோடி, மற்றும் ரூ.218 கோடி சொத்துக்களை அமலாக்கத்துறை மோசடி வழக்கில் சேர்த்தது. அதன்பின் அவரது இந்திய சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி வருகிறது. 

இதுவரை 4800 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை இந்த வழக்குடன் சேர்த்திருப்பதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளார். 

இந்நிலையில், துபாய்ல நிரவ் மோடிக்கு சொந்தமான ரூ.56 கோடி மதிப்பிலான 11 சொத்துக்களை இந்த வழக்கில் சேர்க்க அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. இது தொடர்பாக அதிகாரபூர்வமாக ஐக்கிய அரபு அமீரக அதிகாரிகளை தொடர்பு கொண்டு கோரிக்கை வைத்துள்ளதாம் அமலாக்கத்துறை. 

newstm.in
 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close