சபரிமலை சர்ச்சை; 200 பேர் மீது வழக்கு பதிவு

  Newstm Desk   | Last Modified : 07 Nov, 2018 04:34 am
police-file-cases-against-200-protestors

சபரிமலை சன்னிதானத்தில் 10 முதல் 50 வயதிலான பெண்களை நுழைய விடாமல் நடத்தப்பட்ட போராட்டத்தை தொடர்ந்து, 200 பக்தர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். 

சபரிமலை கோவிலுக்குள் அனைத்து பெண்களும் நுழையலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்ததை தொடர்ந்து, பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வந்தன. திங்களன்று, விசேஷ பூஜைக்காக கோவில் திறக்கப்பட்டதை தொடர்ந்து, 30 வயதான ஒரு பெண் தனது கணவன் மற்றும் குழந்தையுடன் கோவிலுக்கு வந்துள்ளார். கடும் போராட்டங்கள் நடந்ததை தொடர்ந்து, அவர்கள் திரும்பிச் சென்றனர். 

அதேபோல செவ்வாயன்றும், போராட்டங்கள் நடைபெற்றன. கோவிலுக்கு சென்று கொண்டிருந்த இரண்டு பெண்களை, பக்தர்கள் பம்பையில் தடுத்து நிறுத்தினர். அவர்களை அனுமதிக்க மறுத்து கோஷங்களை எழுப்பினர். இருவரும் 50 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் என்றாலும், அவர்களிடம் இருமுடி இல்லாததை சுட்டிக் காட்டி பக்தர்கள் போராடினர். தங்கள் தலைமையிடம் இருந்து தகவல் வரும் வரை போராட்டம் தொடர்ந்தது. பின்னர், அந்த பெண்கள் பாதுகாப்பாக தரிசனம் செய்து சென்றனர். 

இந்த சம்பவங்கள் தொடர்பாக, போராட்டம் நடத்திய 200 பக்தர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். 

newstm.in
 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close