சத்தீஸ்கரில் 62 மாவோயிஸ்டுகள் சரண்: ராஜ்நாத் சிங் பாராட்டு

  டேவிட்   | Last Modified : 07 Nov, 2018 10:39 am
62-maoist-surrendered-in-chhattisgarh

சத்தீஸ்கர் மாநிலத்தில் பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த 62 மாவோயிஸ்டுகள் போலீசில் சரண் அடைந்தனர். இது அரசின் சரண்டர் கொள்கைக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி என்று உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டியுள்ளார். 

சத்தீஸ்கர் மாநிலத்தில் சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் மாவோயிஸ்டுகளை ஒடுக்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. அதேசமயம் பயங்கரவாதப் பாதையில் இருந்து திருந்தி வாழ விரும்பும் மாவோயிஸ்டுகளுக்கு, புனர்வாழ்வு பணிகளுக்கான ஏற்பாடுகளையும் அரசு செய்து கொடுக்கிறது. மாவோயிஸ்டுகள் ஆயுதங்களை ஒப்படைத்து சரண் அடைந்தால் அவர்கள் திருந்தி வாழ வாய்ப்பு வழங்கப்படும் என்று காவல்துறை தொடர்ந்து அறிவிப்பு வெளியிட்டு வருகிறது. 

இந்நிலையில் நாராயண்பூர் மாவட்டத்தில் பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த 62 மாவோயிஸ்டுகள் நேற்று போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தனர். இவர்கள் அனைவரும் கடந்த 9 ஆண்டுகளாக ஜன்தனா சர்கார் என்ற மாவோயிஸ்ட் அமைப்பின்கீழ் செயல்பட்டு வந்தவர்கள் என்றும், அவர்களில் 55 பேர் ஆயுதங்களை ஒப்படைத்து சரண் அடைந்ததாகவும் ஐஜி விவேகானந்த் சின்ஹா தெரிவித்துள்ளார். 

மாவோயிஸ்டுகள் சரண் அடைந்திருப்பது மிகப்பெரிய சாதனை என்றும், இது அரசின் சரண்டர் கொள்கைக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி என்றும் மாநில முதலமைச்சர், டிஜிபி மற்றும் காவல்துறையினருக்கு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டுக்களைத் தெரிவித்தார். 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close