ராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடிய நிர்மலா சீதாராமன்!

  Newstm Desk   | Last Modified : 07 Nov, 2018 04:45 pm
nirmala-sitharaman-celebrates-diwali-with-army-soldiers-their-families-and-locals-at-hyulong-arunachal-pradesh

பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று அருணாச்சல பிரதேச எல்லைப்பகுதியில் ராணுவ வீரர்களுடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடினார்.

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், தீபாவளி பண்டிகையையொட்டி, ராணுவ வீரர்களுடன்  கொண்டாடினார். இதற்காக நேற்று அவர் அசாம் சென்றார். அம்மாநிலத்தில் டின்ஜான் பகுதியில் ராணுவ வீரர்களை சிறப்பிக்கும் பொருட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பேசினார். மேலும், அங்குள்ள ராணுவ வீரர்களுக்கு இனிப்பு வழங்கி தீபாவளி கொண்டாடினார். 

தொடர்ந்து இன்று அருணாச்சல பிரதேச எல்லைப்பகுதியில் ராணுவ வீரர்களை சந்தித்தார். ஹியூலாங் பகுதியில் ராணுவ வீரர்கள் அவர்களது குடும்ப உறுப்பினர்களுடன் அமைச்சர் தீபாவளியை கொண்டாடியுள்ளார். 

பிரதமர் மோடி இன்று உத்தரகாண்டில் உள்ள ஹர்ஷில் பகுதியில் ராணுவ வீரர்களுடன் தீபாவளியை கொண்டாடியது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close