சரயு நதிக்கரையில் ராமர் சிலை நிச்சயம் நிறுவப்படும்: யோகி ஆதித்யநாத் உறுதி!

  Newstm Desk   | Last Modified : 07 Nov, 2018 05:28 pm
yogi-adityanath-confirms-ram-statue-in-ayodhya-visits-two-possible-sites-for-150-metre-tall-structure

சரயு நதிக்கரையில் அமைந்துள்ள அயோத்தி நகரில் பிரம்மாண்டமான ராமர் சிலை நிச்சயம் நிறுவப்படும் என்றும், அதற்காக  இரண்டு இடங்கள் பரிசீலனையில் உள்ளது என்றும் உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். 

குஜராத் மாநிலத்தில் 182 அடி உயரமுள்ள சர்தார் வல்லபாய் படேல் சிலை கடந்த 31ம் தேதி திறந்து வைக்கப்பட்டது. உலகிலேயே உயரமான இந்த சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார். இதேபோன்று அரபிக்கடலில் மற்றொரு பிரமாண்ட சிலையாக மராட்டிய அரசர் சிவாஜிக்கு நிறுவப்பட்டு வருகிறது. இதனைத்தொடர்ந்து அயோத்தியில் பிரமாண்டமான ராமர் சிலையை அமைத்திட முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் முடிவு செய்துள்ளார். 

இதுகுறித்து உத்தரபிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் இன்று கூறுகையில், "அயோத்தியில் ராமர் சிலை அமைப்பதற்கான திட்டம் கிட்டத்தட்ட முடிவாகிவிட்டது. கண்டிப்பாக அங்கு ராமர் சிலை நிறுவப்படும். ராமர் சிலை அமைக்க சரயு நதிக்கரையில் 2 இடங்கள் பரிசீலனையில் உள்ளது. விரைவில் அந்த 2 இடங்களில் ஒரு இடம் தேர்வு செய்யப்படும். வருங்காலத்தில் அயோத்தி நவீன நகரமாக மாறும். ராமர் சிலை அயோத்தியை உலகிற்கு அடையாளம் காட்டும். மேலும், ராமர் சிலை அமைப்பதனால் இப்பகுதி உலக சுற்றுலா தலமாகவும் மாறும்" என்றார். 

நேற்று அயோத்தி நகர் அமைந்துள்ள ஃபைசாபாத் மாவட்டத்தின் பெயர் அயோத்தி மாவட்டம் என்று மாற்றப்பட உள்ளதாக முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்திருந்தார். முன்னதாக அலகாபாத் நகரம், 'ப்ரயாக் ராஜ்' என பெயர் மாற்றம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close