அகமதாபாத்தின் பெயர் கர்ணாவதி என பெயர் மாற்றம்? 

  ஐஸ்வர்யா   | Last Modified : 07 Nov, 2018 06:14 pm
ready-to-change-the-name-of-ahmedabad-as-karnavati-if-there-are-no-hurdles-gujarat-deputy-cm-nitinbhai-patel

சட்ட ரீதியாக பிரச்னை இல்லாத பட்சத்தில், அகமதாபாத் என்ற பெயரை கர்ணாவதி என்று மாற்றம் செய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம் என குஜராத் அரசு தெரிவித்துள்ளது. 

கடந்த சில நாட்களுக்கு முன்னர் அலகாபாத் என்றிருந்த பெயரை பிரயாக்ராஜ் என்று மாற்றி உத்திரபிரதேச ஆதித்யநாத் உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து அயோத்தியில் ராமர் கோயில் எழுப்ப உத்தரபிரதேச அரசு அழுத்தம் கொடுத்து வருகிறது. அதுமட்டுமின்றி பயிஸாபாத் என்ற நகரை அயோத்யா என்றும் உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பெயர் மாற்ற செய்துள்ளார். 

இந்நிலையில், பெயர் மாற்றத்தால் சட்ட ரீதியாக பிரச்னை இல்லாத பட்சத்தில், அகமதாபாத் என்ற பெயரை கர்ணாவதி என்று மாற்றம் செய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம் என குஜராத் அரசு தெரிவித்துள்ளது. மக்களிடம் கிடைக்கும் ஆதரவை பொருத்து கர்ணாவதி என பெயர் மாற்றுவது குறித்து அரசு ஆலோசித்து வருவதாக குஜராத் துணை முதலமைச்சர் நிதின்பாய் பட்டேல் தெரிவித்துள்ளார். மேலும் அகமதாபாத்தின் பெயரைக் கர்ணாவதி என மாற்ற வேண்டும் என்கிற கோரிக்கை நெடுங்காலமாக உள்ளதாகவும், அரசுக்கும் மக்களுக்கும் பிரச்னை இல்லை என்றால் விரைவில் இந்த பெயர்மாற்றம் குறித்து பரிசீலிக்கப்படுவதாகவும்  நிதின்பாய் பட்டேல் தெரிவித்தார். 

Newstm.in 
 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close