மத்திய அரசுடனான மோதல்போக்கு! ரிசர்வ் வங்கி ஆளுநர் பதவி விலகல்...

  ஐஸ்வர்யா   | Last Modified : 07 Nov, 2018 06:38 pm
rbi-governor-urjit-patel-may-quit-at-next-board-meeting-on-november-19

மத்திய அரசுடனான மோதல் போக்கு எதிரொலியாக ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் பட்டேல் வரும் 19 ஆம் தேதி தேதி பதவி விலக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இந்திய வங்கிகளில் வாராக்கடன் அளவு ரூ.10 லட்சம் கோடிக்கும் மேல் தாண்டியுள்ளது. இந்நிலையில், வங்கிகளை கட்டுப்படுத்தும் இடத்தில் உள்ள ரிசர்வ் வங்கி இந்த விவகாரத்தில் என்ன செய்து கொண்டிருந்தது? அதிகப்படியான கடன் வழங்கப்படுவதை ரிசர்வ் வங்கி ஏன் கட்டுப்படுத்தவில்லை? என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி விமர்சித்திருந்தார். கடந்த 2008-2014 வரையில், காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் இதுபோன்று அதிகப்படியான கடன் வழங்கப்பட்டதாகவும் அவர் குற்றம்சாட்டியிருந்தார்.

அதே சமயம், வங்கிகளைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக கூடுதலான தன்னாட்சி அதிகாரம் வேண்டும் என்று மத்திய அரசை ரிசர்வ் வங்கி வலியுறுத்தி வருகிறது.ரிசர்வ் வங்கியில் செய்யப்பட்ட முதலீட்டின் உபரித் தொகையை அரசுக்குத் திருப்பிக் கொடுக்குமாறும், பொதுத்துறை வங்கிகள் கடன் வழங்குவதற்கான கெடுபிடிகளைத் தளர்த்துமாறும் மத்திய அரசு தொடர்ந்து ரிசர்வ் வங்கிக்கு நெருக்கடி கொடுத்து வந்தது. இந்த நெருக்கடியை அடுத்து, ரிசர்வ் வங்கி ஆளுநர் ராஜினாமா செய்யவுள்ளதாக தகவல் வெளியானது.

இதையடுத்து வரும் 19ம் தேதி நடைபெறும் ரிசர்வ் வங்கியின் போர்டு ஆப் டைரக்டர்ஸ் கூட்டத்தில் உர்ஜித் பட்டேல் ராஜினாமா செய்யலாம் என்ற தகவல் பரவிய போதும் மத்திய அரசு விட்டுக் கொடுக்கத் தயாராக இல்லை. இதனால் மத்திய அரசுக்கும், ரிசர்வ் வங்கிக்கும் இடையே மோதல்போக்கு சூடுப்பிடிக்க தொடங்கியுளது. இந்திய சந்தைகளில் பணமதிப்பு சரிந்து வரும் நிலையில், உர்ஜித் பட்டேல் ராஜினாமா செய்தால் வணிக ரீதியான பலவீனத்தை மேலும் அதிகரிக்கும் என்று மத்திய அரசு கருதுவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Newstm.in 
 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close