நாடாளுமன்றத்தை நள்ளிரவில் கலைக்க மைத்திரி திட்டம்? 

  ஐஸ்வர்யா   | Last Modified : 07 Nov, 2018 07:00 pm
srilanka-political-issue

நாடாளுமன்றத்தை நள்ளிரவுடன் கலைப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திட்டமிட்டுள்ளார் என்று பரவிய செய்தியால் கொழும்பு அரசியலில் உச்சக்கட்ட பரபரப்பு நிலவுகிறது.

அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தின் அடிப்படையில் நாடாளுமன்றின் முதலாவது அமர்விலிருந்து 4 ஆண்டுகளும் 6 மாதங்களும் கடந்த பின்னரே ஜனாதிபதி நாடாளுமன்றைக் கலைக்க முடியும். அதனடிப்படையில் நடப்பு நாடாளுமன்றை 2020ஆம் ஆண்டு மார்ச் மாதமே ஜனாதிபதி கலைக்க முடியும். எனினும் நாட்டில் தற்போது ஏற்பட்டு அரசியல் நெருக்கடி நிலையைக் காரணம் காட்டி நாடாளுமன்றை இன்று நள்ளிரவுடன் கலைக்கும் தீர்மானத்தை ஜனாதிபதி எடுத்துள்ளார் என்ற செய்தி தீயாகப் பரவுவதால் கொழும்பு அரசியலில் உச்சக்கட்ட பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

“ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நாடாளுமன்றத்தை உரிய காலத்திற்கு முன்னரே கலைக்க திட்டமிட்டமிட்டுள்ளார். இந்தச் செயலானது அரசியலமைப்பு மீறலாகும்” என்று தெரிவிக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா, இந்நிகழ்வானது இன்று நள்ளிரவே நடைமுறைப்படுத்தக் கூடும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Newstm.in 
 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close